General01 August 2026

மஹர சிறைச்சாலையில் பதற்றம் - வளாகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது

மஹர சிறைச்சாலையில் சிறிய அளவிலான பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

ராகம காவல்துறையினர் இதனை எமது செய்திப் பிரிவுக்கு உறுதிப்படுத்தினர்

இந்தநிலையில், சிறைச்சாலை வளாகத்தின் விசேட பாதுகாப்புக்காக காவல்துறை மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படை குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

அதற்கமைய, சிறைச்சாலை ஆணையாளரின் ஊடாக நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, தற்போதைய நிலைமை தொடர்பில் ஆராய்வதற்கு சில காவல்துறை குழுக்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes