தம்புள்ளை ரங்கிரி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில், இலங்கை மகளிர் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதன் மூலம் இலங்கை மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரை 2-0 என்ற அடிப்படையில் கைப்பற்றியுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மகளிர் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களைக் குவித்தது.
துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் சார்பில் ஷவால் சுல்ஃபிகார் 48 ஓட்டங்களையும், முனீபா அலி 45 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் சமுதி பிரபோதா 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்தநிலையில் 176 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 14 பந்துகள் மீதமிருக்கையில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை அடைந்தது.
துடுப்பாட்டத்தில் அணித்தலைவி சமரி அத்தபத்து 15 பந்துகளில் 40 ஓட்டங்களை விளாசி வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார்.
அறிமுக வீராங்கனை சஞ்சனா கவிந்தி 46 ஓட்டங்களையும், ஹர்ஷிதா சமரவிக்ரம ஆட்டமிழக்காமல் 37 ஓட்டங்களையும் பெற்று அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
இரு அணிகளுக்கும் இடையிலான தொடரின் மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டி, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தம்புள்ளையில் நடைபெறவுள்ளது.
Latest News
உதயநிதி ஸ்டாலின் பேச்சைக் கண்டித்து தவெக சார்பில் இன்று போராட்டம்
Local
04 August 2026
கண்டி, நுவரெலியா, கேகாலை மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு தொடர்ந்தும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை!
Local
04 August 2026
அனர்த்தங்களால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு; ஒருவர் காணாமல்போயுள்ளார்
Local
04 August 2026
நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது நீடிப்பு - அரசியலமைப்பில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி
Local
04 August 2026
ஹட்டன் - கினிகத்தேனை வீதி வழமைக்கு
Local
04 August 2026
இலங்கையின் புதிய அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு!
Local
04 August 2026
கொழும்பு - கண்டி பிரதான வீதி மீண்டும் வழமைக்கு
Local
04 August 2026
காவல்துறை மா அதிபர் குறித்த சர்ச்சை கருத்து - சிக்கலில் சாகர காரியவசம்!
Local
04 August 2026
கொட்டித் தீர்க்கப்போகும் பலத்த மழை - இன்றைய வானிலை அறிக்கை
Local
04 August 2026
ஈரானுக்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திட இதுவே 'கடைசி வாய்ப்பு' : எச்சரிக்கிறார் ட்ரம்ப் !
Local
04 August 2026