உலகின் மிகப்பெரிய ஒர்க்கிட் தாவரமாகக் கருதப்படும் 'ராட்சத ஒர்க்கிட்' (Giant Orchid) தாவரத்தின் மலர்க்கொத்து ஒன்று, சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு பேராதனை அரச தாவரவியல் பூங்காவில் தற்போது பூத்துள்ளது.
தாவரவியல் ரீதியாக Grammatophyllum speciosum என அழைக்கப்படும் இந்த ராட்சத ஒர்க்கிட் தாவரம், உலகின் மிகப்பெரிய ஒர்க்கிட் தாவர இனமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்துக் கருத்து தெரிவித்த பேராதனை அரச தாவரவியல் பூங்காவின் ஒர்க்கிட் பிரிவின் தலைவர் இரோஷனி அந்திராதி, பூங்காவிற்குள் இந்த ராட்சத ஒர்க்கிட் மலர் இனம் கடைசியாக 2010 ஆம் ஆண்டிலேயே பார்க்கக் கிடைத்ததாகக் குறிப்பிட்டார்.
தற்போது பூத்துள்ள தாவரம் 2022 ஆம் ஆண்டில் நடப்பட்ட ஒன்றாகும்.
அந்த தாவரத்தில் முதல் முறையாகவே தற்போது பூக்கள் பூத்துள்ளன.
இவ்வாறான பூப்படைதல் மிகவும் அரிதாகவே நடக்கும் என்பதால், இது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்குக் கிடைத்த மிகவும் அரிய வாய்ப்பாகும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த ஆர்க்கிட் தாவரம் முக்கியமாக தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர் மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவிக் காணப்படுகிறது.
முழுமையாக வளர்ந்த ஒரு ராட்சத ஒர்க்கிட் தாவரம் ஒரு தொன் (1000 கிலோகிராம்) வரை எடை கொண்டதாக இருப்பதுடன், 2 முதல் 3 மீற்றர் உயரம் வரை வளரக்கூடிய பெரிய பூங்கொத்துகளைக் கொண்டிருக்கும்.
இந்த தாவரத்தில் பொதுவாக 4 ஆண்டுகளுக்கு ஒருமுறையே பூக்கள் பூப்பதுடன், அதற்குச் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை நிலமைகளும் பலமாகச் செல்வாக்குச் செலுத்துகின்றன.
தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எச்.சி.பி. ஜெயவீர தெரிவிக்கையில், பேராதனை அரச தாவரவியல் பூங்காவில் பூத்துள்ள இந்த ராட்சத ஒர்க்கிட் மலர்க்கொத்தைப் பார்வையிடுமாறு அனைத்து உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் அழைப்பு விடுப்பதாகக் கூறினார்.
Latest News
கிரிக்கெட் வீரர்களின் வரி நெருக்கடி தொடர்பான வழக்கின் தீர்ப்பு ஆகஸ்ட் 31 இல்!
Local
06 August 2026
மலையகக் கட்சித் தலைவர்களுடன் இந்திய வெளியுறவுச் செயலாளர் சந்திப்பு: காணி உரிமை, வீட்டுத்திட்டம் குறித்து பேச்சு!
Local
06 August 2026
வலுவான எல் நினோ தாக்கத்தால் உலகளவில் மேலும் 49 மில்லியன் மக்கள் கடுமையான உணவுப் பஞ்சத்தை எதிர்கொள்ளக்கூடும் என எச்சரிக்கை
Local
06 August 2026
அடுத்த இரண்டு வருடங்களில் டெங்குவை முற்றாக ஒழிக்க திட்டமிட்ட தேசிய திட்டம் அவசியம்: அமைச்சர் வலியுறுத்தல்
Local
06 August 2026
ஃப்ளை பாக்தாத் வானூர்தி நிறுவனம் மீதான தடைகளை நீக்கியது அமெரிக்கா!
Local
05 August 2026
செம்மணியில் திறந்த நீதிமன்ற அமர்வு: புதிதாக மேலும் 8 என்புக்கூடுகள்; இதுவரை 489 என்புக் கூடுகள் அகழ்ந்தெடுப்பு!
Local
05 August 2026
ஹோர்முஸ் நீரிணை கப்பல் பாதை குறித்து ஈரானுக்கும் ஓமானுக்கும் இடையே உடன்பாடு!
Local
05 August 2026
சுரேஷ் சலே வழக்கில், நீதிமன்ற அவமதிப்பு - விமல் வீரவன்ச உள்ளிட்டோருக்கு எதிராக நடவடிக்கை!
Local
05 August 2026
ஆளுமை உரிமை மீறல் குற்றச்சாட்டு - 15 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி நடிகை ஸ்ருதி ஹாசன் நீதிமன்றத்தில் வழக்கு
Local
05 August 2026
மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ பதவிப் பிரமாணம்
Local
05 August 2026