போவதென்ன நீர்த்தேக்கத்தின் நீரை முழுமையாக வெளியேற்றும் பணி வரும் 17ஆம் திகதி தொடங்கப்பட உள்ளதாக நீர்த்தேக்கப் பொறுப்புப் பொறியாளர் புத்திக நவரத்ன தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதிலும் உள்ள நீர்த்தேக்கங்களில் இருந்து வண்டல் மண்ணை அகற்றும் தேசியத் திட்டத்தின் முன்னோடித் திட்டமாக (Pilot Project) இது மேற்கொள்ளப்படுவதாக நீர்த்தேக்கப் பொறியாளர் குறிப்பிட்டுள்ளார்.
போவதென்ன நீர்த்தேக்கம் கட்டப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதன் பதிவு செய்யப்பட்ட நீர் கொள்ளளவு 56 மில்லியன் கன மீற்றர் என்றாலும், 2014ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் அதன் கொள்ளளவு 23 மில்லியன் கன மீற்றராகக் குறைந்துள்ளமை தெரியவந்துள்ளது.
கலாவெல படுகைக்கு நீர் வழங்கும் சுரங்கப்பாதையின் அணுகு கால்வாயில் சுமார் 4 மீற்றர் வரை வண்டல் மண் படிந்து மூடியுள்ளதால், நீர்த்தேக்கத்தில் உள்ள நீரை வெளியேற்றி, அந்த கால்வாயை 100 மீற்றர் தூரத்திற்குச் சுத்தம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்போது சுமார் 10,000 கன மீற்றர் வண்டல் மண்ணை அகற்ற எதிர்பார்க்கப்படுகிறது.
நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நீர்த்தேக்கத்தில் சேமித்து வைக்கக்கூடிய நீரின் அளவை மீண்டும் கணக்கிடுதல், நீர்மின் உற்பத்தி வழித்தடத்தில் உள்ள வண்டல் மண்ணை அகற்றுதல் மற்றும் அகற்றிப் பயன்படுத்தக்கூடிய மணலின் அளவைக் கண்டறிதல் ஆகிய பணிகளும் இதன்போது முன்னெடுக்கப்படவுள்ளன.
இருப்பினும், இந்தச் செயற்பாட்டின் காரணமாக விவசாய நிலங்களுக்கு நீர் விநியோகிப்பதில் எந்தவிதத் தடங்கலும் ஏற்படாது என்றும் பொறியாளர் வலியுறுத்தியுள்ளார்.
Latest News
மெட்ரோ பேருந்துகளில் போதைப்பொருள் கண்டறியும் சென்சார்கள் அறிமுகம்
Local
04 August 2026
"கைது நடவடிக்கைக்கு ஒருபோதும் அஞ்ச மாட்டோம்" - அதிரடி முழக்கத்துடன் காவல்துறையினரிடம் பேசிய உதயநிதி!
Local
04 August 2026
நுவரெலியா நோர்டன் பகுதியில் 258.6 மில்லிமீற்றர் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவு
Local
04 August 2026
ஒரு சம்பவத்தால் மட்டுமே சூர்ப்பணகை அறியப்படுகிறார் - ராமாயணா குறித்து மனம் திறந்த ரகுல் ப்ரீத் சிங்
Local
04 August 2026
மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு
Local
04 August 2026
நீதிமன்ற வழக்குத் தேக்க நிலை மற்றும் சிறைச்சாலை நெரிசலைத் தீர்க்க விசேட நாடாளுமன்றக் குழு! –சஜித் பிரேமதாச யோசனை சமர்ப்பிப்பு
Local
04 August 2026
அழைப்பாணை கிடைத்தால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு யோஷித ராஜபக்ஷ மற்றும் வசந்த கரன்னாகொடவுக்கு உத்தரவு!
Local
04 August 2026
உதயநிதி ஸ்டாலின் கைது - பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை!
Local
04 August 2026
சீரற்ற வானிலை: தரம் 5 புலமைப்பரிசில் மற்றும் உயர்தரப் பரீட்சைகள் குறித்து நாளை விசேட கலந்துரையாடல்
Local
04 August 2026
உதயநிதி ஸ்டாலின் இல்லம் முன்பு காவல்துறை குவிப்பு : கைது செய்ய வந்ததாக தகவல்
Local
04 August 2026