General04 August 2026

ஹட்டன் - கினிகத்தேனை வீதியில் 5 இடங்களில் மண்சரிவு

கடும் மழை காரணமாக ஹட்டன் - கினிகத்தேனை பிரதான வீதியின் 5 இடங்களில் பெரிய அளவிலான மண்மேடுகள் சரிந்து விழுந்து மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக நோர்வுட் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் நிறைவேற்று பொறியியலாளர் ஏ.எம்.சாதிக் தெரிவித்துள்ளார்.

வீதியில் சரிந்து விழுந்துள்ள மண்மேடுகள் மற்றும் கற்களை அகற்றி, போக்குவரத்து நடவடிக்கைகளை இயல்பு நிலைக்குக் கொண்டுவரும் பணிகள் நேற்று (03) ஆரம்பிக்கப்பட்டன.

எனினும், நிலவும் பலத்த மழை காரணமாகக் குறித்த பணிகளுக்கு கடும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக பொறியியலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக, குறித்த வீதியைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes