அமெரிக்காவின் வொஷிங்டன் மாநிலத்தில் காட்டுத்தீ தீவிரமடைந்துள்ளதால், சுமார் 60,000 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
நூற்றுக் கணக்கான கட்டடங்கள் சேதமடைந்துள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் மின்சாரமின்றி தவித்து வருகின்றனர்.
ஸ்போகேன் நகரத்தைச் சுற்றி மூன்று பெரிய காட்டுத்தீ கட்டுப்பாடற்ற முறையில் தொடர்ந்து எரிந்து வருவதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
"எமது பிராந்தியம் சந்தித்துள்ள மிக மோசமான இயற்கை பேரழிவு இது" என ஸ்போகேன் மேயர் லிசா பிரவுன் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, வொஷிங்டன் மாநில ஆளுநர் பாப் பெர்குசன் மாநிலம் முழுவதும் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளார்.
நிலைமையைக் கட்டுப்படுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிடம் கூட்டாட்சி உதவியைக் கேட்டுள்ளதாக மாநில ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இதுவரை வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் உட்பட சுமார் 600 கட்டிடங்கள் தீக்கிரையாகியுள்ளன.
மேலும் 10,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் மின்சார இணைப்பை இழந்துள்ளனர்.
பலத்த காற்று மற்றும் வறண்ட வானிலை காரணமாகத் தீ வேகமாகப் பரவி வருகின்றது.
இதுவரை உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ உறுதி செய்யப்படாத போதிலும், பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறும், வெளியேறுமாறு அறிவுறுத்தப்படும் போது உடனடியாக ஒத்துழைக்குமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Latest News
"கைது நடவடிக்கைக்கு ஒருபோதும் அஞ்ச மாட்டோம்" - அதிரடி முழக்கத்துடன் காவல்துறையினரிடம் பேசிய உதயநிதி!
Local
04 August 2026
நுவரெலியா நோர்டன் பகுதியில் 258.6 மில்லிமீற்றர் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவு
Local
04 August 2026
ஒரு சம்பவத்தால் மட்டுமே சூர்ப்பணகை அறியப்படுகிறார் - ராமாயணா குறித்து மனம் திறந்த ரகுல் ப்ரீத் சிங்
Local
04 August 2026
மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு
Local
04 August 2026
நீதிமன்ற வழக்குத் தேக்க நிலை மற்றும் சிறைச்சாலை நெரிசலைத் தீர்க்க விசேட நாடாளுமன்றக் குழு! –சஜித் பிரேமதாச யோசனை சமர்ப்பிப்பு
Local
04 August 2026
அழைப்பாணை கிடைத்தால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு யோஷித ராஜபக்ஷ மற்றும் வசந்த கரன்னாகொடவுக்கு உத்தரவு!
Local
04 August 2026
உதயநிதி ஸ்டாலின் கைது - பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை!
Local
04 August 2026
சீரற்ற வானிலை: தரம் 5 புலமைப்பரிசில் மற்றும் உயர்தரப் பரீட்சைகள் குறித்து நாளை விசேட கலந்துரையாடல்
Local
04 August 2026
உதயநிதி ஸ்டாலின் இல்லம் முன்பு காவல்துறை குவிப்பு : கைது செய்ய வந்ததாக தகவல்
Local
04 August 2026
மெர்வின் சில்வாவின் வழக்குடன் நான் தொடர்புபடவில்லை! - அப்போது நான் பாடசாலை மாணவி: பிரபல நடிகை பகிரங்க அறிக்கை
Local
04 August 2026