காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
தற்போதைய காவல்துறை மா அதிபர் அரசாங்கத்திற்கு சேவையாற்றுவதை விடுத்து, அரசுக்கும் மக்களுக்குமே சேவையாற்ற வேண்டும் என ஊடக சந்திப்பொன்றில் சாகர காரியவசம் தெரிவித்திருந்தார்.
மேலும், 37வது காவல்துறைத் தலைவர் "தெருவில் மக்களின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த காவல்துறைத் தலைவர் என்ற பெயரில் வரலாற்றில் இடம்பிடிப்பதை" தாம் விரும்பவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்த கூற்று தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் ஆனந்த விஜேபால, இந்தக் கருத்துக்களை அரசாங்கம் இலகுவாக எடுத்துக்கொள்ளாது என்றும், இது குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இத்தகைய கருத்துக்கள், கடந்த காலத்தில் அரசியல் அதிகாரத்திற்காக மக்களைப் பலிகொடுத்த ஒரு அரசியல் இயக்கத்தின் மனநிலையைப் பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இதனைப் பொறுப்பற்ற செயல் என்றும் விமர்சித்தார்.
தற்போதைய காவல்துறை மா அதிபர் தனது கடமைகளைத் திறம்படச் செய்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், ஊழல், கையூட்டல் மற்றும் அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பான விசாரணைகள் தொடர்வதால் பயமடைந்தவர்களாலேயே இவ்வாறான கருத்துக்கள் வெளியிடப்படுவதாகஅமைச்சர் தெரிவித்தார்.
விசாரணை முடிவுகளின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்துள்ளார்.
Latest News
ஆகஸ்ட் மாதத்தில் லிட்ரோ எரிவாயு கொள்கலன் விலையில் மாற்றமில்லை
Local
06 August 2026
"இந்த ஜென்மத்திற்கு விடை பெறுகிறேன்" : 'சீதா ராமம்' திரைப்படம் குறித்து வெளியாகியுள்ள நெகிழ்ச்சி தகவல்!
Local
06 August 2026
நெடுந்தீவு கடற்பரப்பில் படகு விபத்து - 11 இந்திய கடற்றொழிலாளர்கள் பாதுகாப்பாக மீட்பு
Local
06 August 2026
2.5 மில்லியன் டொலர் சைபர் திருட்டு : 5 நாடுகளிடம் இலங்கை சட்ட உதவி கோரிக்கை
Local
06 August 2026
கடும் மழையின் எதிரொலி: ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் ஒரு பகுதி தாழிறங்கும் அபாயம்
Local
06 August 2026
யூடியூபர் சவுக்கு சங்கரின் மகன் உயிரிழப்பு – காவல்துறை விசாரணை தீவிரம்!
Local
06 August 2026
சுவிட்ஸர்லாந்தில் பரவும் நோய் : ஒருவர் பலி - 28 பேர் பாதிப்பு!
Local
06 August 2026
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் மூன்றாம் தவணை முதல் கட்டம் நாளை நிறைவு
Local
06 August 2026
மக்கள் பிரதிநிதிகளின்சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்த சட்டத் திருத்தம் - அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு
Local
06 August 2026
சைபர் பாதுகாப்பு சோதனையில் அதிர்ச்சி: AIக்கு இணைய அணுகல் கிடைத்தால் என்ன நடக்கும்? மெட்டா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
Local
06 August 2026