முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வாவுக்கு எதிராக கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தொடரப்பட்டுள்ள வழக்குடன் தொடர்புடைய DFCC வங்கி கணக்கு ஒன்றில் பணம் வைப்பு செய்யப்பட்ட விவகாரத்தில், தனது பெயரைத் தொடர்புபடுத்தி வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை மற்றும் தவறாக வழிநடத்துபவை என பிரபல சிங்கள நடிகை ரீத்து ஆகர்ஷா பகிரங்க அறிக்கை ஒன்றினூடாக வலியுறுத்தியுள்ளார்.
குறித்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் 'ரீத்து ஆகர்ஷா' என்ற பெயரில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ள DFCC வங்கிக் கணக்கை தாம் ஒருபோதும் பராமரிக்கவில்லை என்றும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள கணக்கு எண் தன்னுடையது அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனது பெயரில் அத்தகைய வங்கிக் கணக்கு எதுவுமே குறித்த வங்கியில் இல்லை என்பதை உறுதிப்படுத்தி, DFCC வங்கியினால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றையும் அவர் ஊடகங்களுக்கு சமர்ப்பித்துள்ளார்.
2010 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி முதல் 2012 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் முன்னாள் அமைச்சர் 600 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சட்டவிரோத சொத்துக்களை சேர்த்ததாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், அக் காலப்பகுதியில் தாம் பாடசாலை மாணவியாகக் கல்வி கற்றுக்கொண்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது நற்பெயருக்கு பெரும் களங்கம் ஏற்படுத்தியமை தொடர்பில் பொய்ப் தகவல்களைப் பரப்பிய ஊடக நிறுவனங்கள், சமூக ஊடகக் கணக்குகள் மற்றும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இனிவரும் காலங்களில் இவ்வாறான பொய்களையோ, திருத்தப்பட்ட அல்லது தவறாக வழிநடத்தும் செய்திகளையோ வெளியிடுபவர்கள் அல்லது பகிர்ந்துகொள்பவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

Latest News
சண்டீபுரா வைரஸ் பாதிப்பு: குஜராத்தில் 22 சிறுவர்கள் உயிரிழப்பு!
Local
04 August 2026
மெட்ரோ பேருந்துகளில் போதைப்பொருள் கண்டறியும் சென்சார்கள் அறிமுகம்
Local
04 August 2026
"கைது நடவடிக்கைக்கு ஒருபோதும் அஞ்ச மாட்டோம்" - அதிரடி முழக்கத்துடன் காவல்துறையினரிடம் பேசிய உதயநிதி!
Local
04 August 2026
நுவரெலியா நோர்டன் பகுதியில் 258.6 மில்லிமீற்றர் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவு
Local
04 August 2026
ஒரு சம்பவத்தால் மட்டுமே சூர்ப்பணகை அறியப்படுகிறார் - ராமாயணா குறித்து மனம் திறந்த ரகுல் ப்ரீத் சிங்
Local
04 August 2026
மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு
Local
04 August 2026
நீதிமன்ற வழக்குத் தேக்க நிலை மற்றும் சிறைச்சாலை நெரிசலைத் தீர்க்க விசேட நாடாளுமன்றக் குழு! –சஜித் பிரேமதாச யோசனை சமர்ப்பிப்பு
Local
04 August 2026
அழைப்பாணை கிடைத்தால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு யோஷித ராஜபக்ஷ மற்றும் வசந்த கரன்னாகொடவுக்கு உத்தரவு!
Local
04 August 2026
உதயநிதி ஸ்டாலின் கைது - பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை!
Local
04 August 2026
சீரற்ற வானிலை: தரம் 5 புலமைப்பரிசில் மற்றும் உயர்தரப் பரீட்சைகள் குறித்து நாளை விசேட கலந்துரையாடல்
Local
04 August 2026