நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் யோசனை நிறைவேற்றப்பட்டால், நாட்டின் நீதித்துறை கட்டமைப்பு மீதான மக்களின் நம்பிக்கை சீர்குலைந்து, நாடு படிப்படியாகச் சர்வாதிகார ஆட்சியை நோக்கிச் செல்லும் ஆபத்து இருப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய தெரிவித்துள்ளார்.
ஹிரு டி.வியில் ஒளிபரப்பான சலகுண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் இதனை குறிப்பிட்டார்.
ஒரு தனிநபரை இலக்காகக் கொண்டு அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ள அவர், நீதித்துறையின் சுதந்திரம், ஊடக சுதந்திரம் மற்றும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதாகக் கூறி அதிகாரத்துக்கு வந்த அரசாங்கம், கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊழல் நடவடிக்கைகளையே மீண்டும் வேறு வடிவத்தில் செய்ய முற்படுவது கவலையளிப்பதாகக் குறிப்பிட்டார்.
நீதிமன்ற சுதந்திரத்தைக் குறைப்பதற்கோ அல்லது பறிப்பதற்கோ எந்த அரசாங்கத்துக்கும் மக்கள் ஆணை வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ள அவர், அரசியலமைப்பில் மாற்றம் ஏற்படும் பட்சத்தில், இந்த யோசனை கட்டாயமாகப் பொதுஜன வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், இந்த யோசனை பொருத்தமற்றது என முப்பீட மகாநாயக்க தேரர்களும், அங்லிகன் திருச்சபையும் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வழக்குகளை விரைவுபடுத்துவதே நோக்கம் என அரசாங்கம் கூறினாலும், இந்த அவசரத் திருத்தத்தின் பின்னணியில் ஏதோ ஒரு மறைமுக உள்நோக்கம் இருப்பதாகவே தெரிகிறது. நீதிமன்ற முறைமை மீதான மக்களின் நம்பிக்கை உடைந்தால் அதனை மீண்டும் கட்டியெழுப்புவது மிகவும் கடினம்.
இறுதியில் சர்வாதிகார ஆட்சியை நோக்கி செல்வதற்கான இயலுமை இல்லாமலும் இல்லை எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய தெரிவித்துள்ளார்.

Latest News
மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 250 மெட்ரிக் தொன் 'பெய்லி' பாலங்களை வழங்கியது இந்தியா!
Local
06 August 2026
காவல்துறை மாஅதிபரின் பாதுகாப்பு மற்றும் சாகர காரியவசமின் சர்ச்சை பேச்சு: விசாரணைகளைத் தொடர நீதிமன்றம் அனுமதி!
Local
06 August 2026
அனுமதியற்ற 146 சூதாட்ட இணையதளங்களை முடக்க தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு உத்தரவு!
Local
06 August 2026
தெற்கு மற்றும் கிழக்குக் கடற்பகுதிகளில் கடும் கொந்தளிப்பு: கடற்றொழிலாளர்களுக்கு அவசர எச்சரிக்கை
Local
06 August 2026
எல் நினோ தாக்கம்: மொனராகலை மக்களுக்கு தொடர்ச்சியான குடிநீர் விநியோகத்திற்கு நடவடிக்கை
Local
06 August 2026
பேருந்துப் பயணக் கட்டணத்தை அட்டைகள் மூலம் செலுத்தும் முறை விரைவில்
Local
06 August 2026
ஏமன் படை முகாம்கள் மீது தாக்குதல்: 30 பேர் பலி, பலர் காயம்
Local
06 August 2026
லாஃப்ஸ் எரிவாயு கொள்கலன் விலையிலும் மாற்றமில்லை
Local
06 August 2026
தாயகம் திரும்புவதற்கு ஷேக் ஹசீனா தயார் - பங்களாதேஷில் மீண்டும் பதற்றம்
Local
06 August 2026
முதலமைச்சர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: நாளை மீண்டும் விசாரணை
Local
06 August 2026