தனியார் மற்றும் பகுதியளவு அரச துறைகளில் பணிபுரியும் ஓய்வூதிய உரிமையற்ற ஊழியர்களுக்கான சமூகப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ஊழியர் சேமலாப நிதி (EPF) சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
1958ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதிச் சட்டம் தற்போது நடைமுறையில் உள்ள நிலையில், சமூக, பொருளாதார மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் குறைத்து, தரமானதும் திறன்மிக்கதுமான சேவைகளை வழங்கும் வகையில் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதற்கான முன்மொழிவுகளை இலங்கை மத்திய வங்கி சமர்ப்பித்துள்ளதுடன், அவற்றை அடிப்படையாகக் கொண்டு தொழில் திணைக்களம் ஆரம்ப வரைவைத் தயாரித்துள்ளது.
அந்த ஆரம்ப வரைவை அடிப்படையாகக் கொண்டு, ஊழியர் சேமலாப நிதிச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலத்தைத் தயாரிக்க சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குமாறு தொழில் அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Latest News
சில பகுதிகளில் இன்று 100 மில்லிமீட்டருக்கும் அதிக பலத்த மழை : வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
Local
06 August 2026
மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக நடத்துமாறு இலங்கையிடம் இந்தியா மீண்டும் வலியுறுத்து!
Local
06 August 2026
மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி தொடரைச் சமன் செய்தது பாகிஸ்தான்: ஐசிசி உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம்!
Local
06 August 2026
மெக்சிகோவில் டிக்டொக் பிரபலம் நேரலையில் துப்பாக்கிச் சூட்டில் பலி!
Local
06 August 2026
அநுராதபுரத்தில் ஒரேயொரு தமிழ் பாடசாலையின் காணியை பாதுகாக்க பெரும் போராட்டம்!
Local
06 August 2026
புத்தாண்டு அழகி போட்டியில் மலைப்பாம்புடன் நடனமாடிய பெண் உட்பட இருவருக்கு அபராதம்!
Local
06 August 2026
சொந்த படையின் தாக்குதலை எதிரி என நினைத்து ஏவுகணையை ஏவியது இஸ்ரேல்!
Local
06 August 2026
‘TM App’ செயலி தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டமாக அறிவிப்பு: பட்டியலை புதுப்பித்தது இலங்கை மத்திய வங்கி!
Local
06 August 2026
கோப் குழு கூட்டத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட அதிகாரிகள் இருவர் மன்னிப்பு கோரினர்!
Local
06 August 2026
செங்கடல் கப்பல்கள் மீதான ஹூதி தாக்குதல்: ஏமன் வெளியுறவு அமைச்சருடன் ஐ.நா தூதர் ஆலோசனை!
Local
06 August 2026