General05 August 2026

சஷீந்திர ராஜபக்ச உள்ளிட்ட மூவருக்கு எதிரான கையூட்டல் வழக்கு செப்டம்பர் மாதம் மீண்டும் விசாரணைக்கு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச உள்ளிட்ட மூவருக்கு எதிராக கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, எதிர்வரும் செப்டம்பர் 28ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, முன்னதாக பிணை நிபந்தனை பெற்றிருந்த சஷீந்திர ராஜபக்ச உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளும் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.

இதன்போது முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த நீதிபதி, வழக்கை மேலதிக விசாரணைக்காக 2026 செப்டம்பர் 28ஆம் திகதி மீண்டும் அழைக்க உத்தரவிட்டார்.
Related recommendation
Hiru TV News | Programmes