பிரித்தானிய அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி யூஜினி, போர்த்துகலின் லிஸ்பன் நகரிலுள்ள மருத்துவமனையில் பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.
அரச குடும்பம் வெளியிட்ட தகவலின்படி, குழந்தை திங்கட்கிழமை மாலை 6.20 மணிக்கு பிறந்ததுடன், பிறக்கும் போது 6 பவுண்டு 9 அவுன்ஸ் எடை கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
36 வயதான இளவரசி யூஜினிக்கும் அவரது கணவர் ஜாக் புரூக்ஸ்பாங்கிற்கும் இது மூன்றாவது குழந்தையாகும்.
இவர்களுக்கு ஏற்கனவே 2021ஆம் ஆண்டு பிறந்த ஓகஸ்ட் பிலிப் ஹாக் புரூக்ஸ்பாங்க் மற்றும் 2023ஆம் ஆண்டு பிறந்த எர்னஸ்ட் ஜோர்ஜ் ரோனி புரூக்ஸ்பாங்க் ஆகிய இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
புதிய குழந்தையின் பெயர் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இந்த மகிழ்ச்சியான செய்தி தொடர்பில், மன்னர் சார்ல்ஸ் மற்றும் அரசி கமிலா உள்ளிட்ட அரச குடும்ப உறுப்பினர்கள் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, இளவரசி யூஜினி தனது இன்ஸ்டாகிராம் பதிவில், "எங்கள் பெண் குழந்தையின் வருகையை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். எங்கள் மகளை அளவற்ற அன்புடன் வரவேற்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், புதிய குழந்தை பிரித்தானிய அரச அரியணை வாரிசுரிமைப் பட்டியலில் 15ஆவது இடத்தை பெறுவார் என்றும், அவருக்கு HRH (His/Her Royal Highness) என்ற அரச மரியாதைப் பட்டம் வழங்கப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Latest News
பிரித்தானியாவில் வீணடிக்கப்படும் மருந்துகளால் 75 நீச்சல் தடாகங்களை நிரப்ப முடியும் என அதிர்ச்சித் தகவல்!
Local
08 August 2026
ஜப்பானின் ஒகினாவாவைத் தாக்கியது 'டொல்பின்': துறைமுகங்களை மூடியது சீனா: போக்குவரத்தும் முடக்கம்!
Local
08 August 2026
தந்தையின் இறுதிக்கிரியைக்கு கூட வராத மகள்கள்: காணொளி அழைப்பு மூலம் அஞ்சலி
Local
08 August 2026
கிரிக்கெட் நட்சத்திரத்தின் வரி சாதனை: ரிஷப் பண்ட் செலுத்திய வரி எவ்வளவு தெரியுமா?
Local
08 August 2026
இலங்கை சிறைச்சாலைகளில் உள்ள இந்திய கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை
Local
08 August 2026
இன்று முதல் 10 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு: லங்கா சதொச அறிவிப்பு!
Local
08 August 2026
முதலமைச்சர் விவகாரத்தில் சமரசமா? மன்னிப்பு கேட்ட மார்க்கண்டேயன்!
Local
08 August 2026
"எந்த நிமிடத்தில் தொடங்கினாலும் ரஜினி பணம் தருவார்!" - லதா ரஜினிகாந்த் அதிரடி!
Local
08 August 2026
தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்
Local
08 August 2026
கணேமுல்ல சஞ்சீவ வழக்கின் முக்கிய சந்தேகநபர் மெகசின் சிறை மோதலில் உயிரிழப்பு
Local
08 August 2026