வெலிக்கடை சிறைச்சாலையில் உயிரிழந்த குட்டிமணி மற்றும் தங்கத்துரை ஆகியோருக்கு, வல்வெட்டித்துறையில் சிலை அமைப்பதைத் தடுக்கும் வகையில் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்திருந்த தற்காலிகத் தடை உத்தரவு இன்று நீக்கப்பட்டுள்ளது.
குறித்த சிலை அமைப்பு தொடர்பில், வல்வெட்டித்துறை நகரசபை முன்னாள் உப தவிசாளரும் ஏற்பாட்டாளருமான கந்தசாமி சதீஷுக்கு எதிராக வல்வெட்டித்துறை காவல்துறையினர் கடந்த ஜூலை 22ஆம் திகதி வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு விசாரணையின்போது, மேலதிக ஆதாரங்களைச் சமர்ப்பிப்பதற்காக காவல்துறையினர் 14 நாட்கள் கால அவகாசம் கோரியிருந்தனர்.
எனினும், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 106ஆம் பிரிவின்படி, தற்காலிகத் தடை உத்தரவை 14 நாட்களுக்கு மேல் நீடிக்க முடியாது என நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
இதனையடுத்து, வழங்கப்பட்ட கால அவகாசத்திற்குள் காவல்துறையினர் போதுமான ஆதாரங்களையோ ஆவணங்களையோ சமர்ப்பிக்காத காரணத்தால், முன்னர் பிறப்பிக்கப்பட்டிருந்த தற்காலிகத் தடை உத்தரவை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் இன்று நீக்கியுள்ளது.
இதன் மூலம், குட்டிமணி மற்றும் தங்கத்துரை ஆகியோருக்கு சிலை அமைப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த நீதிமன்றத் தடை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Latest News
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு: நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கப் பிரேரணை!
Local
07 August 2026
விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு முடிவுக்கு வந்தது: மனுவை மீளப் பெறுவதாக நீதிமன்றத்தில் அறிவிப்பு
Local
07 August 2026
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை மறுதினம்
Local
07 August 2026
சிறைச்சாலை மோதல்கள் - ஜனாதிபதி தலைமையில் விசேட சந்திப்பு
Local
07 August 2026
தனது லயோலா கல்லூரி சிரேஷ்ட மாணவர், தனது வகுப்பு மாணவரைக் கைது செய்வார் என கனவில் கூட நினைக்கவில்லை
Local
07 August 2026
இரண்டு நிமிடம் மௌனமான தமிழக சட்டமன்றம் - மறைந்த பிரபலங்களுக்கு மரியாதை!
Local
07 August 2026
சிறைச்சாலைப் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்திற்கு விளக்கமளிக்க வேண்டும் - சஜித் வலியுறுத்தல்!
Local
07 August 2026
பல்லன்சேன திறந்தவெளி சிறைச்சாலையில் கண்ணீர் புகை பிரயோகம்
Local
07 August 2026
சிறைச்சாலைச் சம்பவங்களின் பின்னணியில் சதித்திட்டம் - நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவிப்பு!
Local
07 August 2026
லலித் – குகன் காணாமற்போன வழக்கு: முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச காணொளி ஊடாக சாட்சியமளிக்க உத்தரவு
Local
07 August 2026