நுகர்வோரின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கிலான தொடர்ச்சியான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, நடப்பு ஆண்டில் நாடுமுழுவதும் மொத்தம் 471 விசேட மருந்தக சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, கடந்த 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனைகளின்கீழ் 109 மருந்தகங்கள் பரிசோதிக்கப்பட்டதுடன், அவற்றில் 86 சட்டமீறல்கள் கண்டறியப்பட்டதாக அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், கடந்த ஜனவரி 01 ஆம் திகதி முதல் ஜூன் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் நாடுமுழுவதும் 362 மருந்தகங்களில் சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. அண்மைய சோதனைகளுடன் சேர்த்து, இவ்வருடத்தில் நடத்தப்பட்ட விசேட மருந்தக சோதனைகளின் மொத்த எண்ணிக்கை 471 ஆக அதிகரித்துள்ளது.
இந்த சட்ட அமலாக்க நடவடிக்கைகளின் விளைவாக நீதிமன்ற நடவடிக்கைகளின் மூலம் 2,269,500 ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
காலாவதியான மருந்துகள் மற்றும் மருந்துப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டமை, கட்டாய நுகர்வோர் தகவல்கள் இல்லாத மருந்துகள், நுகர்வோர் தகவல்களுக்கான விதிகளை மீறியமை, அத்துடன் மருந்தகங்கள் ஊடாக விற்பனை செய்யப்படும் மருத்துவ உபகரணங்கள், குழந்தைகள் பயன்பாட்டுப் பொருட்கள் மற்றும் ஏனைய நுகர்வோர் பொருட்கள் தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகள் இந்த சோதனைகளின் போது கண்டறியப்பட்டுள்ளன.
இந்த சோதனைகளின் போது கைப்பற்றப்பட்ட காலாவதியான மருந்துகள், மாத்திரைகள், ஊசி மருந்துகள், ஊசி குழாய்கள் (Syringes), கிரீம்கள், குழந்தைகள் பயன்பாட்டுப் பொருட்கள், கர்ப்பப் பரிசோதனை கருவிகள் (Pregnancy test kits), மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் சம்பந்தப்பட்ட நீதவான் நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

Latest News
ஸ்பெயின் - இத்தாலி இடையே எல்லைக் கட்டுப்பாடுகள் தீவிரமடைகின்றன
Local
08 August 2026
இறுதி நாட்களில் டியாகோ மரடோனா மரணத்தை ஏற்கத் துணிந்தவராக செயற்பட்டார்.
Local
08 August 2026
2026 ஜூலையில் ரஷ்யாவுக்கு 42,800 இழப்புகள்: யுக்ரைன் தகவல்
Local
08 August 2026
தொலைபேசி எண் பெயர்வுத் திட்டம் செப்டம்பரில் ஆரம்பிக்கப்படாது: அரசாங்கம் விளக்கம்!
Local
08 August 2026
பரதநாட்டிய காணொளி சர்ச்சை: சமூக வலைத்தளங்களில் வெடித்த விவாதம் – பிரபுதேவாவுக்கு வலுக்கும் ஆதரவு
Local
07 August 2026
டொராண்டோ திரைப்பட விழாவில் அமலா பாலின் ஹாஃப்: சர்வதேச அளவில் மாஸ் காட்டும் புதிய படம்!
Local
07 August 2026
கைதிகளின் பிணை நடைமுறைகளை விரைவுபடுத்த நடவடிக்கை: அமைச்சர் ஹர்ஷன நானாயக்கார
Local
07 August 2026
இந்திய நிதியமைச்சரை சந்தித்த செந்தில் தொண்டமான் : முன்வைக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகள்
Local
07 August 2026
ஹாய் திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகுமா? – வெளியீட்டு திகதி குறித்து குழப்பம்
Local
07 August 2026
பல்லேகலை – தும்பர போகம்பர சிறைச்சாலை பகுதியில் பலத்த பாதுகாப்பு
Local
07 August 2026