வாகனம் செலுத்தும் போது காணொளிகளைப் பார்ப்பதைத் தவிர்க்குமாறு காவல்துறை கோரிக்கை விடுத்துள்ளதுடன்,சில வினாடி கவனச்சிதறல் கூட பாரிய உயிராபத்துகளுக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரித்துள்ளது.
பொது பாதுகாப்புத் தொடர்பான விசேட செய்தியொன்றை வெளியிட்டுள்ள காவல்துறை, காணொளிகளைப் பார்ப்பதற்காக வீதியிலிருந்து கவனத்தைத் திருப்புவதன் மூலம் எதிரே வாகனம், பாதசாரி அல்லது ஏனைய தடைகளைத் தவிர்ப்பதற்குத் தேவையான முக்கியமான எதிர்வினை நேரத்தை சாரதிகள் இழக்க நேரிடும் எனத் தெரிவித்துள்ளது.
"நீங்கள் பார்க்கும் காணொளியினால் சில வினாடிகள் மட்டுமே வீதியிலிருந்து உங்களது கவனம் திசைதிருப்பப்பட்டாலும், ஆபத்தை உணர்ந்து அதிலிருந்து தப்பிப்பதற்கான மதிப்புமிக்க நேரத்தை இழக்கிறீர்கள்" என காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், சாரதிகள் தங்களது உயிரை மட்டுமன்றி பயணிகள், பாதசாரிகளின் உயிர்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்புடையவர்கள் என்பதையும் நினைவூட்டியுள்ளது.
பயணத்தை நிறைவு செய்த பின்னரே காணொளிகள் மற்றும் பிற பொழுதுபோக்குகளைப் பார்க்குமாறு அறிவுறுத்தியுள்ள காவல்துறை, காணொளிகளைப் பின்னர் பார்க்கலாம்; ஆனால் "இழந்த உயிரை மீண்டும் பெற முடியாது" என்பதையும் அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளது.
எனவே, வீதியைப் பயன்படுத்தும் அனைத்துத் தரப்பினரும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொண்டுள்ள காவல்துறை, விபத்துகளின்றி பாதுகாப்பாக இலக்குகளை அடைய சாரதிகள் முழு கவனத்துடன் வாகனங்களைச் செலுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

Latest News
சவூதி அராம்கோ சுத்திகரிப்பு ஆலை மீது ஹூதிகள் தாக்குதல்: தீ முழுமையாகக் கட்டுப்பாடு
Local
10 August 2026
மேற்கு கனடாவில் தீவிரமடையும் காட்டுத்தீ: பிரிட்டிஷ் கொலம்பியாவில் அவசர நிலை அறிவிப்பு!
Local
10 August 2026
டொல்பின்' சூறாவளி தாக்குதல்: சீனாவில் 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றம்!
Local
10 August 2026
"தமிழகத்தில் விஜய் ஊழலற்ற ஆட்சியைத் தருகிறார்; அவரே அடுத்த பிரதமர்!"
Local
09 August 2026
சிறைச்சாலை அமைதியின்மை: உயர் அதிகாரிகளை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்க நடவடிக்கை!
Local
09 August 2026
சாய் சுதர்சனுக்கு பதில் சர்ஃபராஸ் கான் இந்திய அணியில்!
Local
09 August 2026
டெங்கு நுளம்பு குடம்பிகளின் அடர்த்தி குறைந்துள்ளது!
Local
09 August 2026
கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு திறப்பு: மக்களுக்கு எச்சரிக்கை!
Local
09 August 2026
சிறையிலுள்ள சகோதரருக்கு 'சில்லி பேஸ்ட்டில்' போதைப்பொருள் கொண்டு சென்ற இருவர் கைது!
Local
09 August 2026
தென் மற்றும் கிழக்குக் கடற்பரப்புகளில் பலத்த காற்று: சிறிய படகுகளுக்குத் தடை!
Local
09 August 2026