Entertainment07 August 2026

நடிகர் ரஜினிகாந்தின் புதிய திரைப்படத்தில் இணையும் நடிகை ஸ்ரீலீலா

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ரீலீலா.

இவர் சமீபத்தில் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ திரைப்படத்தில் நடித்துள்ளமையுடன், தனுஷின் ‘ஓம்’ திரைப்படத்திலும் நடித்து வருகின்றார்.

இந்த நிலையில், நடிகை ஸ்ரீலீலா நடிகர் ரஜினிகாந்தின் புதிய திரைப்படத்தில் இணைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இருப்பினும், அஸ்வத் மாரிமுத்து இயக்கும் ‘தர்மன்’ திரைப்படத்திலா அல்லது நெல்சன் இயக்கத்தில் ரஜினி - கமல் இணையவுள்ள திரைப்படத்திலா அவர் நடிக்கின்றார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes