பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, வடமத்திய, வடமேல், சபரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களுக்கும் திருகோணமலை மாவட்டத்திற்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை அறிவிப்பு அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 40 - 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, சில கடற்பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 60 - 70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சிலாபத்திலிருந்து கற்பிட்டி ஊடாக மன்னார் வரையிலும், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரைக்கு அப்பாலான கடற்பகுதிகளில் இந்த நிலைமை ஏற்படக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மறு அறிவித்தல் வரை குறித்த கடற்பகுதிகளுக்குள் படகுகள் மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகளுக்காக செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
Latest News
தரமற்ற தலைக்கவசங்கள் பறிமுதல் - நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை
Local
09 August 2026
5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை இன்று
Local
09 August 2026
சமூக வலைத்தளப் பயனாளர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை!
Local
09 August 2026
மூலிகை மருத்துவத்தை நாடி ஆபத்தில் சிக்கித் தவிக்கும் யேமன் மக்கள்!
Local
09 August 2026
35 கிலோ சைக்கிளை (ஈருருளியை) பற்களால் கவ்வி நடந்து சாதனை
Local
09 August 2026
சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட பொதிகள் - போதைப்பொருட்களுடன் இருவர் கைது
Local
09 August 2026
நிம்மதிப் பெருமூச்சில் இலங்கை - ஏற்றம் கண்ட நாட்டின் தங்கக் கையிருப்பு!
Local
09 August 2026
திரையுலகில் 20 ஆண்டுகள் நிறைவு: ரசிகர்களுக்கு நன்றி கூறிய வெங்கட் பிரபு!
Local
09 August 2026
அஸ்வெசும நிதியில் மாபெரும் மோசடி: மேலும் 2 அதிகாரிகள் அதிரடி பணிநீக்கம்!
Local
09 August 2026
ஹோர்முஸ் நீரிணையில் சுங்கக் கட்டணமா? அமெரிக்கா வெளியிட்ட முக்கிய செய்தி!
Local
09 August 2026