கோல்டன் குளோப் மற்றும் எம்மி விருதுகளை வென்ற பிரபல ஹொலிவுட் நடிகையும், 'கண்ணிவெடி ஆலோசனை குழுவின்' (Mines Advisory Group - MAG) தூதுவருமான ரொசமண்ட் பைக் (Rosamund Pike) இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
கடந்த 17 ஆண்டுகளில் இலங்கையில் ஒரு மில்லியன் கண்ணிவெடிகள் வெற்றிகரமாக அகற்றப்பட்ட மைல்கல்லைக் குறிப்பதே இவரது விஜயத்தின் முக்கிய நோக்கமாகும்.
தமது விஜயத்தின்போது, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள கண்ணிவெடி அகற்றும் பகுதிகளுக்குச் சென்ற ரொசமண்ட் பைக், கண்ணிவெடிகளால் பாதிக்கப்பட்ட மக்களையும், விபத்துகளில் இருந்து உயிர்தப்பியவர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.
அத்துடன், பாடசாலை மாணவர்களுக்காக நடாத்தப்பட்ட கண்ணிவெடி ஆபத்து தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் சிலவற்றிலும் அவர் பங்கேற்றார்.
இதனிடையே, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் அதிகாரிகளைச் சந்தித்து, நாட்டின் கண்ணிவெடி அகற்றும் பணிகளின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் அவர் கலந்துரையாடவுள்ளார்.
இந்த சந்தர்ப்பம் குறித்து கருத்து தெரிவித்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக், கண்ணிவெடிகளற்ற நாடாக மாறுவதற்கான பாதையில் இலங்கை மிகச் சிறந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
கடந்த 17 ஆண்டுகளில் நாட்டில் ஒரு மில்லியன் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன.
வருடாந்த கண்ணிவெடி விபத்துகளின் எண்ணிக்கை 250 இலிருந்து 2024 ஆம் ஆண்டளவில் 3 ஆகக் குறைவடைந்துள்ளது.
இந்த கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளின் மூலம் இடம்பெயர்ந்த சுமார் ஒரு மில்லியன் மக்கள் மீண்டும் தங்களது சொந்த வீடுகளுக்குச் சென்று பாதுகாப்பாக வாழ்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Latest News
செம்மணி புதைகுழியில் தொடரும் அதிர்ச்சி: 4 சிறார்கள் உட்பட 10 மனித என்புக்கூடுகள் அகழ்வு!
Local
13 August 2026
டொக்சிக் திரைப்பட விழாவில் மாஸ் என்ட்ரி கொடுத்த நயன்தாரா: சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்த புதிய தோற்றம்!
Local
13 August 2026
93 சந்தேகநபர்களுக்கு எதிராக சர்வதேச சிவப்பு எச்சரிக்கை
Local
13 August 2026
வத்தளை துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் - இந்தியாவில் கைதான இரு சந்தேகநபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்!
Local
13 August 2026
பெறுமதி சேர் வரியை செலுத்த ஆகஸ்ட் 20 ஆம் திகதி வரை கால அவகாசம் - தவறும் பட்சத்தில் அபராதம்!
Local
13 August 2026
அவுஸ்திரேலியாவில் 7.5 இலட்சத்துக்கும் அதிகமான சமூக ஊடகக் கணக்குகள் முடக்கம்!
Local
13 August 2026
எல் நினோ தாக்கம் - 2027 ஆம் ஆண்டு வரை வறட்சி தீவிரமடையும் அபாயம்!
Local
13 August 2026
இரண்டாவது மகனின் பிறந்தநாளுக்கு உருக்கமான பதிவு வெளியிட்ட ஆர்த்தி ரவி!
Local
13 August 2026
மின்தூக்கியில் ஏன் கண்ணாடி வைக்கப்பட்டுள்ளது தெரியுமா? காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!
Local
13 August 2026
ஒரே நாளில் 1.06 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: கைச்சாத்தான ஒப்பந்தங்கள் - முதலமைச்சர் ஜோசப் விஜய் அசத்தல்!
Local
13 August 2026