தனது தோல்விகளை மறைப்பதற்காக எதிர்க்கட்சிகள், சிவில் அமைப்புகள் மற்றும் மகா சங்கத்தினரை அடக்கி ஒடுக்கும் வகையில் அரசாங்கம் சர்வாதிகாரப் பாதையில் பயணிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசியல் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.
நாட்டில் நிலவும் நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதை விடுத்து, தன் மீதும் எதிர்க்கட்சிகள் மீதும் பழியைப் போட்டு அரசாங்கம் தப்பிக்கப் பார்ப்பதாக அவர் கூறினார்.
வரிக் கொள்கைகளில் அடிக்கடி மாற்றங்களைச் செய்வதன் மூலம் சாதாரண உழைப்பாளிகள், நாளாந்த வருமானம் ஈட்டுவோர் மற்றும் மாதச் சம்பளக்காரர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை குறிப்பிட்ட சில தரப்பினருக்கு மாத்திரம் சலுகைகள் அள்ளிக் கொடுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கக் கணக்குகளில் ட்ரில்லியன் கணக்கில் பணம் இருப்பதாகக் காட்டுவது மட்டுமே ஒரு அரசாங்கத்தின் வெற்றியல்ல என்றும், மாறாக புதிய தொழில்முனைவோரையும் செல்வத்தை உருவாக்கும் குடிமக்களையுமே அரசாங்கம் உருவாக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அண்மையில் இடம்பெற்ற அரச நிதி சைபர் திருட்டு சம்பவங்களின் நஷ்டம், உயர்த்தப்பட்ட வரிகள் மூலமாக பொதுமக்கள் மீதே சுமத்தப்படுகின்றது.
தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் ஏற்பட்ட இழப்புகள் மற்றும் மின்சாரக் கட்டண உயர்வுகளுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அரசாங்கம் எதிர்க்கட்சியினரை இலக்கு வைப்பதிலேயே கவனம் செலுத்துகிறது.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதால் மட்டும் நீதித்துறையின் தாமதங்களுக்கு தீர்வு கண்டுவிட முடியாது.
நீதிபதி வெற்றிடங்களை நிரப்புதல், புதிய நீதிமன்றங்களை உருவாக்குதல் மற்றும் நிபுணர் அறிக்கைகளை விரைவாகப் பெறுவதன் மூலமே வழக்குகளை விரைவுபடுத்த முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Latest News
சுகயீன விடுமுறையை அறிவித்து கிராம உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்
Local
10 August 2026
பிற்பகல் 2 மணிக்குப்பின்னர் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும்
Local
10 August 2026
க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்
Local
10 August 2026
உலகின் மிக முக்கிய குற்றவாளி கைது. நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
Local
10 August 2026
ரங்கன ஹேரத்திற்குப் பிறகு இலங்கையின் சுழற்பந்து வீச்சு பலவீனமடைந்துள்ளது: ரவிச்சந்திரன் அஸ்வின்
Local
10 August 2026
தங்க ராணிகளின் சமர் ( Battle of Golden Queens) முரண்பாட்டுடன் நிறைவு: விருது வழங்கும் நிகழ்வை புறக்கணித்த கல்லூரி
Local
10 August 2026
தொழில் நிமித்தப் பயணக் கொடுப்பனவு உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கிராம அலுவலகர்கள் பணிப்புறக்கணிப்பு
Local
10 August 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் ஆகஸ்ட் 18 இல் சமர்ப்பிப்பு!
Local
10 August 2026
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகளுடன் அரசாங்கக் குழு சந்திப்பு
Local
10 August 2026
எனது அம்மா யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்: விஜய் மகன் ஜேசன் சஞ்சய் வெளிப்படை!
Local
10 August 2026