காலாவதியான மருத்துவப் பொருட்கள் மற்றும் இரசாயனங்களைப் பயன்படுத்தியமை, சேமித்து வைத்திருந்தமை மற்றும் இரத்தப் பரிசோதனைக்கு நோயாளிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
2026 ஜூலை 24 அன்று நடத்தப்பட்ட சிறப்புச் சோதனையைத் தொடர்ந்து, நுகர்வோர் விவகார அதிகாரசபை கேகாலை நீதிவான் நீதிமன்றத்தில் இந்த மருத்துவமனைக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தது.
நுகர்வோர் அதிகாரசபையின் சோதனையின்போது, முழுமையான இரத்தப் பரிசோதனைக்கான கட்டுப்பாட்டு விலை 400 ரூபாயாக இருக்கும் நிலையில், குறித்த மருத்துவமனை 500 ரூபாயை வசூலித்தமை கண்டறியப்பட்டது.
அத்துடன் மருத்துவமனை ஆய்வகத்தில் காலாவதியான 20 ர்ஊஏ சுயினை வுநளவ ஊயளளநவவநள பொதிகள் மற்றும் ; சிஸ்டம் கிளீனிங் சொல்யூஷன் (System Cleaning Solution), திராவக சொல்யூஷன் (Acid Solution) உள்ளிட்ட மருத்துவச் செயல்முறை அமைப்பு பகுப்பாய்வாளர்கள் பயன்படுத்தும் காலாவதியான இரசாயனங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்ததையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதற்கிடையில், மருத்துவமனையின் மருந்தகத்தில் காலாவதியான 23 UNOLOK ஒற்றைப் பயன்பாட்டு ஊசிகள் (Single-use u;ypodermic Needles) விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன.
குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்கு கேகாலை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மருத்துவமனை நிர்வாகம் மூன்று குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டது.
இதனைத் தொடர்ந்து, மருத்துவமனை நிர்வாகத்திற்கு நீதிவான் 520,000 ரூபாய் அபராதம் விதித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், காலாவதியான மருந்துகள், இரசாயனங்கள் அல்லது மருத்துவ உபகரணங்களைப் பயன்படுத்தும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட கட்டணங்களை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் அல்லது ஆய்வகங்கள் குறித்து தகவல் தெரிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
இத்தகைய தகவல்களை அலுவலக நேரங்களில் 1977 என்ற எண்ணுக்கு அழைப்பதன் மூலம் தமது அதிகாரசபைக்குத் தெரிவிக்கலாம் என்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது.
Latest News
‘சச்சின்’ படத்தில் விஜய்யிடம் "உங்க ஸ்மைல் கியூட்" எனப் பேசிய சிறுமி: வைரலாகும் தற்போதைய காணொளி!
Local
10 August 2026
வடக்கு , கிழக்கு மாகாண ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு முன்னுரிமை - பிரதமர் ஹரிணி அமரசூரிய உத்தரவு!
Local
10 August 2026
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த இஷாரா செவ்வந்தி, எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில்
Local
10 August 2026
கிழக்கு மாகாணத்தில் சிறுபோக நெல் அறுவடை நிறைவு
Local
10 August 2026
கேகாலையில் தாமதமாக வழங்கப்பட்ட வினாத்தாள்: இருவேறு கோணங்களில் விசாரணை!
Local
10 August 2026
அரசியல் பிரவேசத்திற்குத் தயாராகிறாரா நடிகர் தனுஷ்?
Local
10 August 2026
தாய்லாந்தில் பாடசாலைகளைத் தொடர்ந்து அரச அலுவலகத்திலும் துப்பாக்கிச்சூடு!
Local
10 August 2026
கடந்த 9 நாட்களில் 4,292 டெங்கு நோயாளர்கள் பதிவு
Local
10 August 2026
கைது செய்யப்பட்ட சாகர காரியவசம் கடுவல நீதிமன்றத்தில் முன்னிலை
Local
10 August 2026
மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு: கஞ்சிபான இம்ரானின் உறவினர் என தகவல்!
Local
10 August 2026