உலகின் மிக முக்கிய தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவரும், சர்வதேசக் குற்றக்குழுவின் தலைவருமாகக் கருதப்படும் டேனியல் கினஹான் (Daniel Kinahan), துபாயில் இருந்து அயர்லாந்துக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில், அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
2015 அக்டோபர் 18 முதல் 2017 ஏப்ரல் 06 வரையிலான காலப்பகுதியில் குற்றவியல் அமைப்பொன்றின் நடவடிக்கைகளை வழிநடத்தியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
49 வயதான கினஹானை ஏற்றி வந்த அயர்லாந்து அரசாங்கத்திற்குச் சொந்தமான வானூர்தி டப்ளினை சென்றடைந்ததும், உடனடியாகக் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சிறப்புச் குற்றவியல் நீதிமன்றத்தில் இடம்பெற்ற 13 நிமிட விசாரணையைத் தொடர்ந்து, அவரை அக்டோபர் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உலகளவில் பல தொன் எடையுள்ள போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களை கடத்தியமை, 12 க்கும் மேற்பட்ட பாதாள உலகக் கொலைகளுடன் தொடர்புடையமை போன்ற குற்றச்சாட்டுகள் கினஹான் மீது சுமத்தப்பட்டுள்ளன.
அத்துடன், உலகின் மிகவும் ஆபத்தான குற்றவியல் அமைப்புகளில் ஒன்றாக டேனியலின் குற்றக்குழுவை அமெரிக்க நிதித் திணைக்களம் விபரித்துள்ளது.
Latest News
செம்மணி மனிதப் புதைகுழியில் புதிய குழிகளைத் தோண்டுவது குறித்து இன்று தீர்மானம்!
Local
13 August 2026
அமெரிக்க சிறைச்சாலையில் மின்னல் தாக்கி 16 கைதிகள் காயம்!
Local
13 August 2026
“நாட்டின் மிகப்பெரிய தந்தமுடைய யானையை காணவில்லை: யானைகள் அழிந்தால் சுற்றாடல் சமநிலை சீர்குலையும்”
Local
13 August 2026
“காந்திக்கு ஆட்டுப்பால் தேடிக்கொடுத்த இலங்கை சிறுமி” - இலங்கை உயர்ஸ்தானிகராலயத்துக்கு வரலாற்று சிறப்புமிக்க ஓவியம் அன்பளிப்பு!
Local
13 August 2026
ஜந்தர் மந்தர் சீசன் 2 விரைவில்: கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவுனர் அபிஜீத் திப்கே அறிவிப்பு!
Local
13 August 2026
ஒரே நாளில் 400 திருமணங்கள்: ஆகஸ்ட் 23 இல் குருவாயூரில் அமையவிருக்கும் மெகா திருமணத் திருவிழா!
Local
13 August 2026
பயணியின் பையில் குரங்கு மண்டை ஓடு: டெல்லி வானூர்தி நிலையத்தில் அதிகாரிகள் தீவிர விசாரணை!
Local
13 August 2026
நிலவில் நிரந்தர மையம்: இஸ்ரோவுக்கு அதிகாரப்பூர்வ அழைப்புவிடுத்த நாசா!
Local
13 August 2026
விஜய் மல்லையா வழக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு!
Local
13 August 2026
ஜப்பானிய 'அனிமே' கதாபாத்திரங்களின் பெயர்களைச் சூட்டும் இந்தோனேசியர்கள் : புதிய ட்ரெண்ட் அறிமுகம்!
Local
13 August 2026