உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தங்களின் முழுமையான ஆதரவை வழங்குவதோடு, இந்த தாக்குதல்களின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகள் மற்றும் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரையும் கண்டறிந்து நாட்டின் சட்டத்துக்கமைய நீதியைப் பெற்றுக்கொடுக்கத் தொடர்ந்து எதிர்பார்ப்பதாக கொழும்பு பேராயர் இல்லம் தெரிவித்துள்ளது.
பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்தின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி கோட்பாடுகளின்படி, மரண தண்டனையானது மனித கண்ணியத்தை மீறுவதாக அமைவதால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
திருச்சபையின் இந்தப் போதனையின் அடிப்படையில் மரண தண்டனை விதிக்கப்படுவதை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என பேராயர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, இலங்கையின் நீதித்துறையின் சுதந்திரத்தின் மீது தமக்கு முழுமையான நம்பிக்கை உள்ளதாகவும், நீதித்துறை எடுக்கும் தீர்மானங்கள் அல்லது விசாரணைகளில் எந்தவொரு வகையிலும் தலையிட விரும்பவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளார்.
கத்தோலிக்க திருச்சபை பழிவாங்கலை விரும்புவதில்லை. "நபர்கள் எப்போதும் கசப்பான உணர்வுகளையும் தனிப்பட்ட பழிவாங்கல்களையும் கடந்து, மனப்பூர்வமாக மன்னிக்க அழைக்கப்படுகிறார்கள்; இருப்பினும், சிவில் சமூகமும் சட்ட அமைப்புகளும் நிறுவப்பட்ட நீதித்துறை மூலமாகப் பொது அமைதி, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டும்" என்று திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இவ்வாறான தீவிரவாதத் தாக்குதல்கள் வழிபாட்டுத் தலங்களிலோ அல்லது நாட்டின் வேறு எந்தவொரு பகுதியிலோ மீண்டும் இடம்பெறாத வகையில் தடுப்பதற்கு அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்களால் இயன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் வலியுறுத்தியுள்ளார்.

Latest News
காஸாவில் அதிகரிக்கும் மனிதநேயத் தேவைகள்: ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை!
Local
11 August 2026
பாலஸ்தீன கால்பந்து கூட்டமைப்பு, 3 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் போட்டித் தொடர்களைத் ஆரம்பித்துள்ளது!
Local
11 August 2026
மர்மப் பையில் மனித உடல்? - அவுஸ்திரேலியாவில் பொம்மையால் ஏற்பட்ட கொலை வழக்குக் குழப்பம்!
Local
11 August 2026
கொலம்பியாவில் பயங்கர நிலநடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை உயர்வு!
Local
11 August 2026
கொலம்பியாவில் சக்திவாய்ந்த நில நடுக்கம்: சுமார் 26 பேர் உயிரிழப்பு!
Local
10 August 2026
தண்டனைக் கைதிகள் 1,506 பேருக்கு புனர்வாழ்வு - சமூகத்தில் மீண்டும் இணைக்க புதிய சட்டத் திருத்தங்கள்!
Local
10 August 2026
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் : முதலமைச்சர் ஜோசப் விஜய் கொண்டு வந்த தனித் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றம்!
Local
10 August 2026
சாகர காரியவசத்துக்கு பிணை; வெளிநாட்டு பயணத் தடையும் விதிப்பு!
Local
10 August 2026
போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனையை அமுல்படுத்துவது குறித்து அரசாங்கத்தின் அவதானம்!
Local
10 August 2026
சாரதிகளுக்குத் திடீர் போதைப்பொருள் பரிசோதனை: புதிய நடமாடும் மருத்துவ பேருந்து கையளிப்பு!
Local
10 August 2026