காஸா மீதான இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்கள் பாலஸ்தீன மக்களுக்குத் தொடர்ந்தும் ஆபத்தை விளைவிப்பதுடன், அங்குள்ள மனிதநேயத் தேவைகளையும் கணிசமாக அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனிதநேய விவகாரங்களை ஒருங்கிணைக்கும் அலுவலகம் (OCuA) வெளியிட்டுள்ள அண்மைக்கால அறிக்கையில் இந்த தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் இஸ்ரேலிய படைகளின் துப்பாக்கிச் சூடு, பீரங்கித் தாக்குதல்கள் மற்றும் கடற்படைத் தாக்குதல்கள் காரணமாகப் பல பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக,ஐக்கிய நாடுகளின் மனிதநேய விவகாரங்களை ஒருங்கிணைக்கும் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், சர்வதேச மனிதநேயச் சட்டங்களின் கீழ் பொதுமக்களும், பொதுமக்களுக்கான உள்கட்டமைப்புகளும் எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அந்த அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.
போர் ஆரம்பித்ததில் இருந்து காஸா பகுதியில் வெடிக்கும் அபாயமுள்ள 1,000 க்கும் மேற்பட்ட வெடிபொருட்களை, ஐக்கிய நாடுகளின் மனிதநேய விவகாரங்களை ஒருங்கிணைக்கும் அலுவலகத்துடன் இணைந்து பணியாற்றும் அமைப்புக்கள் அடையாளப்படுத்தியுள்ளன.
அத்துடன், இந்த மாதத்தில் மட்டும் 63,000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுக்கு விழிப்புணர்வு அமர்வுகளையும் குறித்த அமைப்புக்கள் நடத்தியுள்ளன.
Latest News
ஜந்தர் மந்தர் சீசன் 2 விரைவில்: கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவுனர் அபிஜீத் திப்கே அறிவிப்பு!
Local
13 August 2026
ஒரே நாளில் 400 திருமணங்கள்: ஆகஸ்ட் 23 இல் குருவாயூரில் அமையவிருக்கும் மெகா திருமணத் திருவிழா!
Local
13 August 2026
பயணியின் பையில் குரங்கு மண்டை ஓடு: டெல்லி வானூர்தி நிலையத்தில் அதிகாரிகள் தீவிர விசாரணை!
Local
13 August 2026
நிலவில் நிரந்தர மையம்: இஸ்ரோவுக்கு அதிகாரப்பூர்வ அழைப்புவிடுத்த நாசா!
Local
13 August 2026
விஜய் மல்லையா வழக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு!
Local
13 August 2026
ஜப்பானிய 'அனிமே' கதாபாத்திரங்களின் பெயர்களைச் சூட்டும் இந்தோனேசியர்கள் : புதிய ட்ரெண்ட் அறிமுகம்!
Local
13 August 2026
38 மணிநேரப் போராட்டத்தின் பின் மீண்ட தாய்: கொலம்பிய சிறுவனுக்கு மறக்க முடியாத பிறந்தநாள் பரிசு!
Local
13 August 2026
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 9 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது: படகும் பறிமுதல்!
Local
13 August 2026
கொஹுவல பாலத்துக்கு கீழ் இளைஞர் மரணம் எனப் போலிச் செய்தி: வதந்தி பரப்புவோருக்கு காவல்துறை எச்சரிக்கை!
Local
13 August 2026
ஹைதரசன் சிற்றூந்தில் மணிக்கு 653 கிலோமீற்றர் வேகம்: உலக சாதனை படைத்தது ஜே.சி.பி ஹைட்ரோமேக்ஸ்!
Local
13 August 2026