காஸா மீதான இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்கள் பாலஸ்தீன மக்களுக்குத் தொடர்ந்தும் ஆபத்தை விளைவிப்பதுடன், அங்குள்ள மனிதநேயத் தேவைகளையும் கணிசமாக அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனிதநேய விவகாரங்களை ஒருங்கிணைக்கும் அலுவலகம் (OCuA) வெளியிட்டுள்ள அண்மைக்கால அறிக்கையில் இந்த தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் இஸ்ரேலிய படைகளின் துப்பாக்கிச் சூடு, பீரங்கித் தாக்குதல்கள் மற்றும் கடற்படைத் தாக்குதல்கள் காரணமாகப் பல பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக,ஐக்கிய நாடுகளின் மனிதநேய விவகாரங்களை ஒருங்கிணைக்கும் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், சர்வதேச மனிதநேயச் சட்டங்களின் கீழ் பொதுமக்களும், பொதுமக்களுக்கான உள்கட்டமைப்புகளும் எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அந்த அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.
போர் ஆரம்பித்ததில் இருந்து காஸா பகுதியில் வெடிக்கும் அபாயமுள்ள 1,000 க்கும் மேற்பட்ட வெடிபொருட்களை, ஐக்கிய நாடுகளின் மனிதநேய விவகாரங்களை ஒருங்கிணைக்கும் அலுவலகத்துடன் இணைந்து பணியாற்றும் அமைப்புக்கள் அடையாளப்படுத்தியுள்ளன.
அத்துடன், இந்த மாதத்தில் மட்டும் 63,000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுக்கு விழிப்புணர்வு அமர்வுகளையும் குறித்த அமைப்புக்கள் நடத்தியுள்ளன.
Latest News
"இந்த வயதில் Drama சங்கடமாக இருக்கிறது" : நடிகை த்ரிஷாவின் பதிவு - இரசிகர்கள் மத்தியில் எழுந்த கேள்வி!
Local
12 August 2026
சுகீஸ்வர பண்டார நீதிமன்றில் முன்னிலை
Local
12 August 2026
வந்தே மாதரம்' பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை
Local
12 August 2026
தங்காலையில் வீடொன்றின் மீது துப்பாக்கிச்சூடு - எவருக்கும் காயமில்லை
Local
12 August 2026
யோஷித ராஜபக்ச, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை
Local
12 August 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம்: ஜனாதிபதியுடன் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இன்று சந்திப்பு!
Local
12 August 2026
குருவிட்ட சிறைச்சாலை மோதல்: இரு கைதிகள் உயிரிழந்தமைக்கான காரணம் பிரேத பரிசோதனையில் வெளியானது
Local
12 August 2026
12 ஆண்டுகளுக்குப் பிறகு புதன்கிழமையில் வரும் ஆடி அமாவாசை!
Local
12 August 2026
மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை: 23 வயது இளைஞர் கைது
Local
12 August 2026
பெல்லன்வில எசல பெரஹர: ஆகஸ்ட் 13 முதல் பல வீதிகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகள்
Local
12 August 2026