இலங்கையில் ஆடி அமாவாசை விரதம் நாளை (12) புதன்கிழமை அனுஷ்டிக்கப்பட வேண்டும் என இந்துக் குருமார் அமைப்பு தெரிவித்துள்ளது.
அமாவாசை தினம் முன்னோர்களை நினைவுகூர்ந்து வழிபடும் முக்கியமான நாளாகக் கருதப்படும் நிலையில், அதிலும் ஆடி அமாவாசை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
ஆடி அமாவாசை தினத்தில் முன்னோர்களின் ஆசீர்வாதத்தைப் பெறும் நோக்கில் தர்ப்பணம், படையல் உள்ளிட்ட வழிபாடுகளை மேற்கொள்வதுடன், காகம் மற்றும் பசுவுக்கு உணவளிப்பது போன்ற பாரம்பரிய நடைமுறைகளையும் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர் நிலைகளுக்குச் சென்று தர்ப்பணம் வழங்க முடியாதவர்கள், வீட்டிலிருந்தபடியே எள் மற்றும் தண்ணீரை வைத்து எளிமையான முறையில் முன்னோர் வழிபாட்டை மேற்கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் பயன்பாட்டில் உள்ள வாக்கிய பஞ்சாங்கம் மற்றும் திருக்கணித பஞ்சாங்கம் ஆகிய இரண்டிலும் நாளை (ஆகஸ்ட் 12) ஆடி அமாவாசை தினமாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக இந்துக் குருமார் அமைப்பு தெரிவித்துள்ளது.
அன்றைய தினம் சூரிய கிரகணம் இடம்பெற்றாலும், அது இலங்கையில் தோற்றமளிக்காது என்பதால், இலங்கையில் நாளையே ஆடி அமாவாசை விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
அதேவேளை, ஐரோப்பிய நாடுகளில் குறித்த சூரிய கிரகணம் தோற்றமளிப்பதால், அங்கு ஆடி அமாவாசை தொடர்பான பிதிர்க்கடன் மற்றும் தர்ப்பணம் உள்ளிட்ட சடங்குகள் மறுநாளான வியாழக்கிழமை (13) கடைப்பிடிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரகணம் ஏற்பட்டு, அது குறிப்பிட்ட பகுதியில் தோற்றமளிக்கும் பட்சத்திலேயே மறுநாள் தர்ப்பணம் உள்ளிட்ட பிதிர்க்கடன்களை மேற்கொள்ள வேண்டும் என ஆகம மற்றும் சம்பிரதாய அடிப்படையில் கூறப்பட்டுள்ளதாகவும் இந்துக் குருமார் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆடி அமாவாசை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வருவதால், பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள குழப்பத்தைத் தெளிவுபடுத்தும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசாமி ஆலயம் உள்ளிட்ட பல ஆலயங்களில் ஆடி அமாவாசை தீர்த்தம் நாளை கடைப்பிடிக்கப்படவுள்ளதாகவும் இந்துக் குருமார் அமைப்பு தெரிவித்துள்ளது.
எனவே, இலங்கையில் நாளை (12) ஆடி அமாவாசை விரதத்தை அனுஷ்டிக்குமாறு இந்துக் குருமார் அமைப்பின் தலைவர் “சிவாகமகலாநிதி” சிவஸ்ரீ கு.வை.க. வைத்தீஸ்வர குருக்கள் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
Latest News
சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' - முன்பதிவில் புதிய சாதனை!
Local
12 August 2026
நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் திடீர் மாற்றம் : அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்
Local
12 August 2026
அரசாங்கம் சர்வாதிகாரத்தை உருவாக்க முயல்கிறது - சஜித் சாடல்
Local
12 August 2026
காணாமல் போன பெண்ணை மீட்பதற்காக நில்வள கங்கையில் தீவிர தேடுதல் நடவடிக்கை
Local
12 August 2026
நீதிபதிகள் ஓய்வுபெறும் வயது எல்லையை அதிகரிக்கும் விவகாரம் - ஜனாதிபதியிடம் சட்டத்தரணிகள் சங்கம் விடுத்த இறுதிக் கோரிக்கை
Local
12 August 2026
இன்ஸ்டாகிராமில் அதிக விருப்பங்களை குவித்த தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் – தனுஷ் முதலிடம்!
Local
12 August 2026
இலங்கையில் அதிகரிக்கும் யானைகளின் மரணங்கள்: சுற்றாடல் அமைச்சு எச்சரிக்கை!
Local
12 August 2026
நீதிபதிகள் ஓய்வுபெறும் வயது எல்லையை அதிகரிக்க வேண்டாம் - மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை
Local
12 August 2026
இந்தியாவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு
Local
12 August 2026
திருமணத்திற்கு முன்பே பிரிவா? திருமணம் குறித்து முதன்முறையாக மனம் திறந்த சாரா டெண்டுல்கர்
Local
12 August 2026