கொழும்பு - பொரளை மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் விநியோகித்து வந்ததாக சந்தேகிக்கப்படும் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கல்கிஸ்ஸ பிராந்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கைது நடவடிக்கையின் போது 20 லட்சம் ரூபாய் பெறுமதியான 100 கிராம் 'ஐஸ்' மற்றும் 20 கிராம் ஹெரோயின் ஆகிய போதைப்பொருட்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
முன்னதாக, போதைப்பொருள் தொகுதியுடன் 32 வயதான ஒருவர் தெஹவளை பகுதியை சேர்ந்த ஒருவர், கல்கிஸ்ஸ பகுதியில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட அவரிடம்; நடத்தப்பட்ட விசாரணையின் போது, மெகசின் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் கைதி ஒருவர் 'வாட்ஸ்அப்' அழைப்பு மூலம் வழங்கிய தகவலின் அடிப்படையில், தான் இந்த போதைப்பொருளை சேகரித்ததாகத் தெரிவித்துள்ளார்.
அந்த போதைப்பொரளை - வனத்த வீதியில் உள்ள பிறிதொரு நபரிடம் ஒப்படைக்கத் திட்டமிட்டிருந்ததாகவும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, கல்கிஸ்ஸ பிராந்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் பொறுப்பதிகாரியின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்ட சிறப்புச் நடவடிக்கையின் போதே, போதைப்பொருளைப் பெற்றுக்கொள்ள வந்ததாக கூறப்படும் சிறைச்சாலை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
Latest News
அவுஸ்திரேலியாவில் 7.5 இலட்சத்துக்கும் அதிகமான சமூக ஊடகக் கணக்குகள் முடக்கம்!
Local
13 August 2026
எல் நினோ தாக்கம் - 2027 ஆம் ஆண்டு வரை வறட்சி தீவிரமடையும் அபாயம்!
Local
13 August 2026
இரண்டாவது மகனின் பிறந்தநாளுக்கு உருக்கமான பதிவு வெளியிட்ட ஆர்த்தி ரவி!
Local
13 August 2026
மின்தூக்கியில் ஏன் கண்ணாடி வைக்கப்பட்டுள்ளது தெரியுமா? காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!
Local
13 August 2026
ஒரே நாளில் 1.06 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: கைச்சாத்தான ஒப்பந்தங்கள் - முதலமைச்சர் ஜோசப் விஜய் அசத்தல்!
Local
13 August 2026
"ஒருநாள் ரெமோ.. மறுநாள் அந்நியன்" - காதல் வலியை வெளிப்படையாக உடைத்த அனுபமா!
Local
13 August 2026
ஹோர்முஸ் நீரிணையில் சிக்கல் - சர்வதேச சந்தையில் மீண்டும் எகிறியது எண்ணை விலை
Local
13 August 2026
மகளிர் ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 தொடர் - சமரி அத்தபத்து தலைமையில் இலங்கை குழாம் அறிவிப்பு!
Local
13 August 2026
கித்துல்கலையில் கைக்குண்டு மீட்பு
Local
13 August 2026
முகநூல் மூலம் கோடிக்கணக்கில் வீட்டு மோசடி: இரண்டு நிறுவனங்களை நடத்தி வந்த நபர் மிரிஹானையில் கைது!
Local
13 August 2026