இலங்கையில் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை மேலும் இரண்டு வருடங்களால் உயர்த்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில், ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசாங்கத்துக்கு விசேட கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி மார்கரெட் சாட்டர்வைட் (Margaret Satterthwaite) இந்த எச்சரிக்கை கடிதத்தை அனுப்பியுள்ளார்.
தற்போதுள்ள அரசியலமைப்பின் படி, உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 65 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 63 ஆகவும் காணப்படுகிறது. புதிய திருத்தத்தின் மூலம் இதனை முறையே 67 மற்றும் 65 ஆக உயர்த்துவதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த அவசர அரசியலமைப்புத் திருத்தமானது நீதிமன்ற அமைப்பின் சுதந்திரத்துக்கும், நியாயமான வழக்கு விசாரணைகளுக்கான உரிமைக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என ஐ.நா விசேட பிரதிநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக, இந்த மாற்றங்கள் எதிர்கால நியமனங்களுக்கு மட்டுமன்றி, தற்போது சேவையிலுள்ள நீதிபதிகளின் பதவிக் காலத்துக்கும் உடனடியாகப் பொருந்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளமை பெரும் கவலையளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முறையான கலந்தாலோசனைகள் இன்றி கொண்டுவரப்படும் இத்தகைய திருத்தங்கள், நீதித்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, இந்த சட்டத்திருத்தத்துக்கான காரணங்கள் மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

Latest News
டுபாயில் கைது செய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்!
Local
14 August 2026
மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய புத்தகங்கள் காகிதக் கூழாக இந்தியாவிற்கு ஏற்றுமதி: காவல்துறையின் அதிரடி விசாரணை!
Local
14 August 2026
பால்வெளிக்கு அப்பால் அரிய நட்சத்திரம்: விண்வெளி ஆய்வில் வெளியான பிரபஞ்ச விசித்திரம்!
Local
14 August 2026
சூரிய கிரகணத்தின்போது திருமணத்துக்கு சம்மதம் கோரிய காதலன்
Local
14 August 2026
வாகன இறக்குமதி வரி: 50% மேலதிகக் கட்டணம் டிசம்பர் 31 வரை நீடிப்பு!
Local
14 August 2026
துபாயில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல் சந்தேகநபர் ஷிரான் பசிக் இன்று நாட்டுக்கு
Local
14 August 2026
இந்தியா – ஆப்கானிஸ்தான் டி20 தொடர் - அட்டவணை மாற்றம் குறித்து பரிசீலனை!
Local
14 August 2026
நாட்டின் பல பகுதிகளில் நாளை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு
Local
14 August 2026
தென்னிந்திய சினிமாவையே ஆக்கிரமிக்கும் சாய் அபயங்கர்! கைவசம் உள்ள முன்னணி நடிகர்களின் 12 திரைப்படங்கள்
Local
14 August 2026
"மண்டபத்திற்குள் விருந்தாளியாக நுழைந்த முதலை!" - அதிர்ச்சியில் உறைந்த ஊழியர்கள்!
Local
14 August 2026