யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 51ஆவது நாள் நடவடிக்கைகள் இன்று இடம்பெற்றன.
இதன்போது, நான்கு சிறார்களின் என்புக்கூடுகள் உள்ளிட்ட 10 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன், புதிதாக 8 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ். நிரைஞ்சன் தெரிவித்துள்ளார்.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளில் மொத்தம் 552 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 540 என்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி வி.எஸ். நிரைஞ்சன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் நீதிவான் செ. லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்ற இந்த அகழ்வுப் பணிகளில், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் தலைமையிலான குழுவினர், தடயவியல் காவல்துறையினர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் நல்லூர் பிரதேச சபை ஊழியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
Latest News
யாழில் வாணவேடிக்கை : கண் பாதிக்கப்பட்ட 150 பேர் மருத்துவமனையில் அனுமதி
Local
21 August 2026
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து: நஷ்டஈடு பெறுவதன் தற்போதைய நிலவரம் குறித்து சஜித் கேள்வி
Local
21 August 2026
வீட்டுப்பாடம் செய்யாததால் ஆசிரியர் தாக்கியதில் 6 வயது சிறுவன் உயிரிழப்பு!
Local
21 August 2026
எரிபொருள் விலை அதிகரிப்பு நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கம் - நாடாளுமன்றத்தில் பிரதமர் விளக்கம்
Local
21 August 2026
சிகிச்சைக்குப் பின்னர் சிறுவன் உயிரிழந்த சம்பவம்: நாடாளுமன்றத்தில் முஜுபுர் ரஹுமான் கேள்வி
Local
21 August 2026
பத்திரிகை நிழற்படக் கலைஞர்களை முதலமைச்சர் விஜய் சந்தித்து எடுத்த காணொளி வைரல்
Local
21 August 2026
தனது இரண்டு பிள்ளைகளைத் தாக்கிய தந்தை விளக்கமறியலில்!
Local
21 August 2026
காவல்துறை நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் நாமல் ராஜபக்ச முன்னிலை
Local
21 August 2026
நந்தா மாலினி மறைவையொட்டி நாடாளுமன்றத்தில் இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி
Local
21 August 2026
நந்தா மாலினி மறைவையொட்டி அரச நிறுவனங்களில் 3 நாட்களுக்கு தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்
Local
21 August 2026