கண்டி - வத்தேகம நகரில், நான்கு வயது சிறுமி ஒருவரை முச்சக்கர வண்டியில் அழைத்துச் சென்ற பெண் ஒருவர், அந்த சிறுமியை நடுவழியில் விட்டுச் சென்றுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.
வத்தேகம நகருக்கு நேற்று காலை சுமார் 7.00 மணியளவில் முச்சக்கர வண்டியில் சென்ற பெண் ஒருவர், உடன் அழைத்து வந்த நான்கு வயது சிறுமியை அங்கேயே இறக்கிவிட்டுத் திரும்பிச் சென்றுள்ளார்.
இதனையடுத்து குறித்த சிறுமி தனியாக நிற்பதைக் கண்ட அந்தப் பகுதி மக்கள், உடனடியாக வத்தேகம காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துச் சிறுமியைப் பாதுகாப்பாகக் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து குறித்த சிறுமி கண்டி போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மீட்கப்பட்ட சிறுமி தமிழ் மொழியில் பேசுகின்ற நிலையில், அவரால், பெற்றோரின் விபரங்களையோ அல்லது தான் வசிக்கும் இடத்தையோ தெளிவாகக் கூறமுடியவில்லை.
அதேநேரம், அவரை ஏற்றி வந்ததாக கூறப்படும் முச்சக்கர வண்டியின் பதிவு எண் தெளிவாகத் தெரியாத காரணத்தினால், வத்தேகம மற்றும் அதனைச் அண்மித்த பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கெமராக்களின் காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு அந்த முச்சக்கர வண்டியையும், சிறுமியை விட்டுச் சென்ற பெண்ணையும் அடையாளம் காணும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Latest News
டுபாயில் கைது செய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்!
Local
14 August 2026
மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய புத்தகங்கள் காகிதக் கூழாக இந்தியாவிற்கு ஏற்றுமதி: காவல்துறையின் அதிரடி விசாரணை!
Local
14 August 2026
பால்வெளிக்கு அப்பால் அரிய நட்சத்திரம்: விண்வெளி ஆய்வில் வெளியான பிரபஞ்ச விசித்திரம்!
Local
14 August 2026
சூரிய கிரகணத்தின்போது திருமணத்துக்கு சம்மதம் கோரிய காதலன்
Local
14 August 2026
வாகன இறக்குமதி வரி: 50% மேலதிகக் கட்டணம் டிசம்பர் 31 வரை நீடிப்பு!
Local
14 August 2026
துபாயில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல் சந்தேகநபர் ஷிரான் பசிக் இன்று நாட்டுக்கு
Local
14 August 2026
இந்தியா – ஆப்கானிஸ்தான் டி20 தொடர் - அட்டவணை மாற்றம் குறித்து பரிசீலனை!
Local
14 August 2026
நாட்டின் பல பகுதிகளில் நாளை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு
Local
14 August 2026
தென்னிந்திய சினிமாவையே ஆக்கிரமிக்கும் சாய் அபயங்கர்! கைவசம் உள்ள முன்னணி நடிகர்களின் 12 திரைப்படங்கள்
Local
14 August 2026
"மண்டபத்திற்குள் விருந்தாளியாக நுழைந்த முதலை!" - அதிர்ச்சியில் உறைந்த ஊழியர்கள்!
Local
14 August 2026