துபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட முன்னணி போதைப்;பொருள் கடத்தல்காரர் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
முன்னதாக, இன்டர்போல் என்ற சர்வதேச காவல்துறையின் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த ஷிரான் பாசிக் மற்றும் பாதாள உலக குழுவைச் சேர்ந்த மேலும் இருவர் துபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.
வானூர்தி நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட குறுகிய விசாரணைகளுக்கு பின்னர் அவர் ஷிரான் பாசிக் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற ஈரான் - அமெரிக்க மோதலின் போது, ஐக்கிய அரபு ராச்சியத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்ட ஆளில்லா வானூர்திகள், ஏவுகணைகள் தொடர்பான ஒளிப்படங்கள் மற்றும் காணொளிகள் என்பன பாசிக்கின் கைப்பேசியில் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, ஐக்கிய அரபு இராச்சிய பாதுகாப்பு அதிகாரிகளால் அவர் துபாயில் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளுக்காக அவரை தம்மிடம் ஒப்படைக்குமாறு அமெரிக்காவும் கோரிக்கை விடுத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
2018 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு தப்பிச் சென்ற தெஹிவளை, களுபோவிலையைச் சேர்ந்த ஷிரான் பாசிக் உட்பட மூவரும், அபுதாபியிலிருந்து புறப்பட்ட எயர் அரேபியா வானூர்தியின் மூலம் நேற்று இரவு 8.48 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச வானுர்தி நிலையத்தைச் வந்தடைந்தனர்.
Latest News
கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் பொது முகாமையாளர்!
Local
18 August 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு
Local
18 August 2026
வரலாற்றில் முதன்முறையாக போக்குவரத்து ஆணைக்குழுவின் முக்கிய பதவிக்கு பெண்கள்!
Local
18 August 2026
கண்டலம விருந்தகத்துக்குள் புகுந்த காட்டு யானை எனினும் ஆச்சரியம்!
Local
18 August 2026
புதிய விதியின் கீழ், களத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முதல் வீரர் நெய்மர்!
Local
18 August 2026
சமித்புர சது ஓமானில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு கைது !
Local
18 August 2026
ஃபிஃபாவின் முதன்மை செயல்பாட்டு அதிகாரி பதவி விலகினார்!
Local
18 August 2026
இந்தியாவில் UPI (Unified Payments Interface) பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிப்பது தொடர்பில் பரிசீலனை!
Local
18 August 2026
ஃபெராரி நிறுவனத்தின் முதலாவது மின்சார வாகனம் ஏல விற்பனையில் சாதனை!
Local
18 August 2026
பெண் ஒருவருக்கு எதிரான வழக்கில் ட்ரம்ப்பின் மேன்முறையீட்டை மீண்டும் நிராகரித்த நீதிமன்றம்!
Local
18 August 2026