மலையகத்திலுள்ள அனைத்து இந்து ஆலயங்களும் இந்து கலாசார திணைக்களத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், பதிவு செய்வதன் மூலமே அரசாங்கத்தின் நிதியுதவிகள் மற்றும் நலத்திட்டங்களைப் பெற முடியும் என்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
மலையகத்தில் பதிவு செய்யப்படாத ஆலயங்கள் தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு பதிவு செய்யப்படும் ஆலயங்களுக்கு மட்டுமே நிதி மற்றும் ஏனைய உதவிகளைப் பெற முடியும் என சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியினூடாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி பதிவு செய்யப்படாத ஆலயங்களின் நிர்வாகிகள் இதற்கான விண்ணப்பப் படிவங்களை இணையவழியில் (Online) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பப் படிவங்களைப் பெறுவதற்கும் மேலதிக வழிகாட்டல்களுக்கும் 070 32 80 729 என்ற அமைச்சின் தொலைபேசி இலக்கத்தைத் தொடர்பு கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பிரதேச செயலகத்தில் ஒப்படைக்கும் போது, இந்து கலாசார திணைக்களத்தின் ஊடாக சட்டத்திற்கு உட்பட்டுப் பரிசீலிக்கப்பட்டு, மிக விரைவாக ஆலயப் பதிவு நடைமுறைகள் முன்னெடுக்கப்படும் என்றும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
Latest News
கடுவெல பகுதியில் இன்று விசேட போக்குவரத்து திட்டம் : காவல்துறை வெளியிட்ட அவசர அறிவிப்பு!
Local
16 August 2026
சர்வதேச கிரிக்கெட்டில் அவுஸ்திரேலியாவின் சாதனையை முறியடித்த ஸ்பெயின் கிரிக்கெட் அணி !
Local
16 August 2026
பிற்பகல் 2 மணிக்கு பின் வெளியே செல்வோரின் கவனத்திற்கு!
Local
16 August 2026
சாதனையாளன் விஜய்யை விட, சுதந்திர தின நிகழ்வில் பேசு பொருளாகிய நடிகை த்ரிஷா!
Local
16 August 2026
6 ஆண்டுகளில் 709 கைதிகள் தப்பி ஓட்டம் : பொதுமக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - தீவிரமாகும் கண்காணிப்பு நடவடிக்கைகள்!
Local
16 August 2026
மரண தண்டனைக்கு முன்னர் நீதித்துறை சீர்திருத்தங்கள் அவசியம்: சிரேஷ்ட சட்டத்தரணி வலியுறுத்து!
Local
16 August 2026
பாகிஸ்தானிலுள்ள இந்துக்கள் எங்களுடனேயே வாழ விரும்புகிறார்கள்" – பாகிஸ்தான் ஜனாதிபதி பேச்சு!
Local
16 August 2026
இலங்கையில் மதுபானத்தால் ஏற்படும் பொருளியல் இழப்பு, வரி வருவாயை விட அதிகம்: ADIC சுட்டிக்காட்டு!
Local
16 August 2026
கொரியப் போரை உத்தியோகபூர்வமாக முடிவுக்குக் கொண்டுவர வடகொரியாவுக்கு தென் கொரியா அழைப்பு!
Local
16 August 2026
தாய் மற்றும் தம்பியின் உயிரை பறித்த 17 வயதுச் சிறுவன்: 'ChatGPT' செயலியைக் கொண்டு திட்டம் தீட்டியமை அம்பலம்!
Local
16 August 2026