இந்தியாவின் 80ஆவது சுதந்திர தின விழா டெல்லி செங்கோட்டையில் நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட நிலையில், அந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடியின் உரையில் ஏற்பட்ட தடுமாற்றம் மற்றும் அவரது ஆடையில் காணப்பட்ட தேசியக் கொடி வடிவமைப்பு ஆகியவை தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன.
சுதந்திர தின உரையின் போது நாட்டின் மின்சார வாகன விற்பனை குறித்துக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, 2009-10 ஆம் நிதியாண்டில் 25 இலட்சம் மின்சார வாகனங்கள் விற்பனையானதாகத் தவறாகத் தெரிவித்தார்.
பின்னர் உடனடியாகத் தனது கூற்றைத் திருத்திக் கொண்ட அவர், அது 1.5 இலட்சம் என்றும், 2025-26 ஆம் நிதியாண்டில் இந்த விற்பனை 25 இலட்சமாக உயர்ந்துள்ளது என்றும் விளக்கமளித்தார்.
பிரதமரின் இந்த தடுமாற்றம் குறித்து விமர்சித்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், "நம்பிக்கையற்ற மற்றும் பதற்றமான நிலையிலேயே பிரதமர் காட்சியளிக்கிறார்" எனத் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதேவேளை, பிரதமர் மோடி அணிந்திருந்த சட்டையின் பையில் பொறிக்கப்பட்டிருந்த மூவர்ணக் கொடி தலைகீழாகக் காட்சி அளித்தமையும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
தேசியக் கொடியில் முதலாவதாக இருக்க வேண்டிய காவி வண்ணம் கடைசியிலும், கடைசியில் இருக்க வேண்டிய பச்சை வண்ணம் முதலிலும் காணப்பட்டதுடன், இது அயர்லாந்து நாட்டின் தேசியக் கொடியை ஒத்திருப்பதாகக் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.
இது குறித்து நகைச்சுவையாக பதிவிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் தேசியச் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா, பிரதமர் உருது மொழியில் மூவர்ணக் கொடியை அணிந்திருப்பது போல் உள்ளதா அல்லது இந்தியாவுக்குப் பதிலாக அயர்லாந்தின் சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறாரா எனத் தெரியவில்லை என்று விமர்சித்துள்ளார்.

Latest News
நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் - அவசர உதவி எண்ணும் அறிவிப்பு
Local
26 August 2026
நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு -காணாமல்போனோர் எண்ணிக்கை 579 ஆக அதிகரிப்பு
Local
26 August 2026
நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கினால் 95 பேர் பலி - நிலநடுக்கத்தால் தூண்டப்பட்ட பனிச்சரிவே காரணமாம்!
Local
26 August 2026
இலங்கையின் ருமேஷ் தரங்க உலகளவில் முதலிடம்!
Local
26 August 2026
சமூக ஊடகங்களில் சிறுவர்கள் மற்றும் பெண்களின் தவறான காட்சிகள் விற்பனை - பெற்றோருக்கு அவசர எச்சரிக்கை
Local
26 August 2026
குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு: அமெரிக்க மாகாணங்களுடன் மெட்டா நிறுவனத்தின் புதிய சமரச ஒப்பந்தம்!
Local
26 August 2026
பங்களாதேஷுக்கு எதிரான மாபெரும் சாதனை: பும்ராவை பின்னுக்குத் தள்ளிய ஸ்டார்க்
Local
26 August 2026
"உங்களிடம் நடிப்பைக் கற்றுக்கொள்ள வேண்டும் - சிறுமி நக்ஷத்ராவின் நடிப்பை வியந்து பாராட்டிய நடிகர் தனுஷ்!
Local
26 August 2026
தியாகி பொன் சிவகுமாரனின் 76 ஆவது பிறந்தநாள் நினைவு தினம் அனுசரிப்பு!
Local
26 August 2026
சிறைச்சாலை விடுதியில் துப்புரவுப் பணியில் ஈடுபட்ட கைதி உந்துருளியுடன் தப்பியோட்டம்
Local
26 August 2026