அரசியலமைப்பின் உத்தேச 22 ஆவது திருத்தம் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்ட பின்னர், மாகாண மட்டத்திலும் மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வுகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
வழமையாக மேன்முறையீட்டு நீதிமன்றம் கொழும்பிலேயே தனது நீதித்துறை அதிகாரங்களைப் பயன்படுத்தி வருகின்ற போதிலும், மாகாண மட்டத்தில் நீதிமன்ற அமர்வுகளை நடத்துவதற்கு அரசியலமைப்பில் ஏற்பாடுகள் காணப்படுகின்றன.
இதற்கு நீதியரசர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியுள்ளதால், 22 ஆவது திருத்த வரைவில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கையை 24 ஆக உயர்த்தும் ஏற்பாடு சேர்க்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
புதிதாக 4 நீதியரசர்கள் சேர்க்கப்படுவதன் மூலம், சில மாகாணங்களில் மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வுகள் ஒரு வருடம் வரை தொடரக்கூடும் என்றும், சில மாகாணங்களில் காலவரையறையின்றி நடைபெறக்கூடும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாகாணத்திலும் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையைப் பொறுத்தே இந்த அமர்வுகளின் கால அளவு தீர்மானிக்கப்படும்.
மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதையும், உச்ச நீதிமன்றங்களின் நீதியரசர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதையும் நோக்கமாகக் கொண்ட 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலமும், மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை மற்றும் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலமும் (18) செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Latest News
மகன் ஆத்விக்கின் கால்பந்து வெற்றியை நிழற்படங்களுடன் கொண்டாடிய ஷாலினி
Local
17 August 2026
நுவரெலியா கிரகரி வாவியில் படகு விபத்து: இரண்டு சிறுவர்களை மீட்டது கடற்படை!
Local
17 August 2026
கல்முனை ஆதார மருத்துவமனையில் தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு நடவடிக்கை
Local
17 August 2026
முதல்வர் விஜய் குறித்து நயினார் நாகேந்திரனின் சர்ச்சை பேச்சுக்கு தொடரும் கண்டனங்கள்!
Local
17 August 2026
பிள்ளையான் உட்பட நால்வருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!
Local
17 August 2026
வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மாகாண சபை முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்!
Local
17 August 2026
நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்
Local
17 August 2026
சூரியனின் "விழுதுகள்" நிகழ்ச்சியில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் விடுத்த கோரிக்கை: மலையக இந்து குருமார் ஒன்றியம் ஆதரவு
Local
17 August 2026
இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்: 5.9 மெக்னிடியூட் அளவில் பதிவு
Local
17 August 2026
கால்பந்து வாழ்க்கைக்கு விடைகொடுக்கிறாரா கிறிஸ்டியானோ ரொனால்டோ?
Local
17 August 2026