தமிழக முதல்வர் விஜய் மற்றும் அவரது தாயார் குறித்து பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவதூறாகப் பேசியதற்கு, தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் செங்கோட்டையன் கருத்துத் தெரிவிக்கையில், நயினார் நாகேந்திரன் இருக்கும் இடம் படிப்படியாகச் சரிவைச் சந்தித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். நயினார் நாகேந்திரன் ஒரு அரசியல் தலைவரைப் போல் பேசாமல், தெருமுனைப் பேச்சாளரைப் போல் பேசியுள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் சாடியுள்ளார்.
பாஜகவினர் பெண்களுக்கெதிரான வெறுப்பையும் அவதூறையுமே அரசியலாகச் செய்வதாகக் குறிப்பிட்ட அமைச்சர் வன்னியரசு, நயினார் நாகேந்திரன் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அரசியல் விரக்தியின் உச்சத்தில் முதல்வர் விஜய் மற்றும் அவரது தாயாரை நயினார் நாகேந்திரன் இழிவாகப் பேசியுள்ளதாகத் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கண்டனம் வெளியிட்டுள்ளார். அதேநேரம், பொறுப்புள்ள தலைவர்கள் பொறுப்பற்ற முறையில் பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாதது எனத் தமாகா தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
அரசியல் நாகரிகத்தின் எல்லைகளை மீறி முதல்வரின் தாயாரை இழிவுபடுத்தும் வகையில் பேசுவது மிகவும் கண்டனத்திற்குரியது என 'வி த லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை சுட்டிக்காட்டியுள்ளார்.
கொள்கைகளை விமர்சிக்கலாம், ஆட்சியின் செயல்பாடுகளைக் கேள்வி கேட்கலாம்; ஆனால் குடும்பத்தை அரசியல் விமர்சனத்திற்குள் இழுப்பது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு அழகல்ல எனத் தவெக செய்தி தொடர்பாளர் மு. சவுந்தர ராஜா வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, சொந்தக் கட்சியின் மாநில துணைத் தலைவரான குஷ்புவும் இக்கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். முதல்வரின் தாயார் குறித்து நயினார் நாகேந்திரன் கூறிய கருத்து அருவருப்பானது என்றும், ஒரு தாயால் தான் இந்த உலகத்திற்கு வந்தோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெண்களை மதிப்பது பாஜகவின் அகராதியிலேயே இல்லாத விஷயம் எனக் குறிப்பிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், நயினார் நாகேந்திரனுக்கு நாவடக்கம் தேவை எனத் தெரிவித்துள்ளார்.
இதேபோல், மேலும் பல அரசியல் கட்சித் தலைவர்களும் நயினார் நாகேந்திரனின் பேச்சுக்குத் தமது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

Latest News
கைது செய்யப்பட்ட சமித்புர சது மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைப்பு
Local
18 August 2026
தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி ஐ.நா.விடம் 'நீதியின் ஓலம்' பிரகடனம் கையளிப்பு
Local
18 August 2026
கஞ்சிப்பானை இம்ரானின் உறவினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட விவகாரம் : 05 பேர் கைது
Local
18 August 2026
திருகோணமலையில் அகற்றப்பட்ட 3.1 கிலோ எடையுள்ள சிறுநீரகக் கல் உலக சாதனையாகப் பதிவாக வாய்ப்பு
Local
18 August 2026
கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் பொது முகாமையாளர்!
Local
18 August 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு
Local
18 August 2026
வரலாற்றில் முதன்முறையாக போக்குவரத்து ஆணைக்குழுவின் முக்கிய பதவிக்கு பெண்கள்!
Local
18 August 2026
கண்டலம விருந்தகத்துக்குள் புகுந்த காட்டு யானை எனினும் ஆச்சரியம்!
Local
18 August 2026
புதிய விதியின் கீழ், களத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முதல் வீரர் நெய்மர்!
Local
18 August 2026
சமித்புர சது ஓமானில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு கைது !
Local
18 August 2026