General17 August 2026

1 பில்லியன் டொலர் மோசடி: 4 தனியார் வங்கி முகாமையாளர்களுக்கு விளக்கமறியல்

சட்டவிரோத பணப்பரிமாற்ற சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட நான்கு தனியார் வர்த்தக வங்கிகளின் முகாமையாளர்களையும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கைக்கு எவ்வித பொருட்களையும் இறக்குமதி செய்யாமல், கொழும்பு - கோட்டையிலுள்ள பணப் பரிமாற்ற நிறுவனம் ஒன்றின் ஊடாக 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பியமை தொடர்பில் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
Related recommendation
Hiru TV News | Programmes