இலங்கை இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய முப்பப்படைகளினாலும் தனித்தனியாக நடத்தப்பட்டு வரும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவுகளை ஒருங்கிணைத்து, ஒரே தேசிய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையத்தை நிறுவ ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க யோசனை தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் 2027ஆம் ஆண்டிற்கான பாதீட்டுக்கு முன்னாயத்தமாக, ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
பாதுகாப்புத் துறையின் இலக்குகளை மேலும் திறமையாகவும் வினைத்திறனுடனும் அடைவதற்கு இத்தகைய ஒருங்கிணைந்த மையம் வழிவகுக்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.
தேசிய பாதுகாப்பை பலப்படுத்தவும், உலகளாவிய புதிய சவால்களை எதிர்கொள்ளவும் பாதுகாப்புத் துறை நவீன தொழில்நுட்பத்துக்கு விரைவாக மாற வேண்டியதன் அவசியம் குறித்தும், நவீன தொழில்நுட்ப சாதனங்களை அதிகளவில் பயன்படுத்துவது குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.
அத்துடன், பாதுகாப்புப் படையினரின் தொழில்முறைத் திறன்களை மேம்படுத்துவதற்கும், புதிய அறிவைப்பெறுவதற்கும் வாய்ப்பளிக்கும் வகையில் வெளிநாட்டுப் பயிற்சித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை அதிகரிப்பது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனையின் நடவடிக்கைகள் மற்றும் ஆரம்பிக்கப்படவுள்ள நெவில் பெர்னாண்டோ மருத்துவமனையின் செயற்பாடுகள் குறித்தும், இவ்விரு நிறுவனங்களுக்குமான தேவையான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.
பாதுகாப்புப் படையினரின் உழைப்புப் பங்களிப்பின் மூலம் அவர்களைக் கட்டுமானத் துறையில் ஈடுபடுத்துவதை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம் குறித்தும் இந்தக் கலந்தரையாடலில் கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Latest News
செர்பியாவில் எரியும் காட்டுத்தீயினை அணைக்க அதிநவீன ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை அனுப்பினார் புடின்!
Local
19 August 2026
35 ஆண்டுகளுக்குப் பிறகு பங்களாதேஷில் ஜனாதிபதித் தேர்தல்: வாக்கெடுப்பு மூலம் தேர்வு!
Local
19 August 2026
செம்மணியின் சோகம் : நிறைவுறாத எண்களுடன் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் நிறைவு
Local
19 August 2026
செங்குத்தாகத் தரையிறங்கும் ரொக்கெட் - விண்வெளித் துறையில் சாதனை படைத்த சீனத் தனியார் நிறுவனம்!
Local
19 August 2026
கிராண்ட் செஸ் டூர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார் பிரக்ஞானந்தா!
Local
19 August 2026
அத்தியாவசிய பொருட்களின் விலை 25 சதவீதம் வரை உயர்வடையும் அபாயம்!
Local
19 August 2026
பாகிஸ்தான் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி: பாபர் அசாம் இன்றி களமிறங்கிய பாகிஸ்தான்!
Local
19 August 2026
கிளிநொச்சியில் புலிகள் பயிற்சி முகாம் அமைக்கப்பட்டுள்ளதாக போலியான தகவல்களைப் பரப்பியவருக்கு விளக்கமறியல்
Local
19 August 2026
சிறைச்சாலைகளில் பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிய ஒருங்கிணைந்த பொறிமுறை – நீதியமைச்சர்
Local
19 August 2026
தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் 30 வயதான பெண் ஒட்டகச்சிவிங்கி உயிரிழப்பு
Local
19 August 2026