நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிப்பதை உள்ளடக்கிய 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
குறித்த சட்டமூலம் இன்றைய நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.
இந்த அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம், 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் நீதித்துறை தொடர்பான ஏற்பாடுகளில் மாற்றங்களை மேற்கொள்வதுடன், நீதித்துறை அமைப்பு சட்டத்திலும் திருத்தங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
தற்போதைய அரசியலமைப்பின்படி, உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஓய்வுபெறும் வயது 65 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஓய்வுபெறும் வயது 63 ஆகவும் உள்ளது.
எனினும், அரசாங்கம் முன்வைத்துள்ள புதிய சட்டமூலத்தின்படி, உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஓய்வுபெறும் வயதை 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஓய்வுபெறும் வயதை 65 ஆகவும் உயர்த்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
அத்துடன், பிரதம நீதியரசர் 67 வயதை அடையும் நாள் அல்லது பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டு ஆறு ஆண்டுகள் நிறைவடையும் நாள் ஆகிய இரண்டில் முதலில் வரும் நாளில் ஓய்வுபெற வேண்டும் என்ற ஏற்பாடும் சட்டமூலத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்களின் பிரதான நோக்கம் நீதிமன்றங்களில் நீண்டகாலமாக தேங்கியுள்ள வழக்குகளை விரைவாக விசாரித்து முடிப்பதும், அனுபவமிக்க நீதிபதிகளின் சேவையைத் தொடர்ந்தும் பயன்படுத்துவதும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
Latest News
அமெரிக்காவும் கனடாவும் வர்த்தக ஒப்பந்தத்துக்கு தயாராகின்றன.
Local
21 August 2026
அல்பேர்ட்டா மாகாணத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அடுத்த 60 நாட்கள்!
Local
21 August 2026
சீனாவில் பொதி செய்யும், தரம் பிரிக்கும் மனித ரோபோக்கள்!
Local
21 August 2026
நைஜீரியாவில் சோகம்: படகு விபத்தில் சிறுவர்கள் உட்பட்ட 40 பேர் பலி!
Local
21 August 2026
தந்தையின் மறைவுக்கு பின்னர், முதல் கோலை பெற்ற மெஸ்ஸி!
Local
21 August 2026
கால்பந்து உலக தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர பிராந்திய கூட்டமைப்புகள் ஆலோசனை!
Local
21 August 2026
காஷ்மீர் குறித்து அமெரிக்கத் தூதரின் கருத்து: பாகிஸ்தான் கண்டனம்!
Local
21 August 2026
அமெரிக்காவின் மொத்த தேசியக் கடன் முதல் முறையாக 40 டொலர் டிரில்லியனைக் கடந்தது!
Local
21 August 2026
அமெரிக்காவின் புதிய போர்க்கப்பல் அரபிக்கடலை சென்றடைந்தது!
Local
21 August 2026
நந்தா மாலனியின் மறைவு :மூன்று நாட்கள் தேசிய துக்க தினங்களாக அறிவிப்பு!
Local
20 August 2026