கிழக்கு மாகாணத்தில் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் 05 கொலைச் சம்பவங்கள் மற்றும் வலிந்துக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் பிள்ளையான் என்றழைக்கப்படும், சிவநேசதுரை சந்திரகாந்தனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 01 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கு இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
குறித்த வழக்கில், சிவநேசதுரை சந்திரகாந்தன் மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிள்ளையான் காணொளி தொழில்நுட்பம் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
Latest News
கிளிநொச்சியில் புலிகள் பயிற்சி முகாம் அமைக்கப்பட்டுள்ளதாக போலியான தகவல்களைப் பரப்பியவருக்கு விளக்கமறியல்
Local
19 August 2026
சிறைச்சாலைகளில் பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிய ஒருங்கிணைந்த பொறிமுறை – நீதியமைச்சர்
Local
19 August 2026
தெஹிவலை மிருகக்காட்சிசாலையின் 30 வயதான பெண் ஒட்டகச்சிவிங்கி உயிரிழப்பு
Local
19 August 2026
போக்குவரத்து அபராதங்களை செப்டம்பர் முதல் டிஜிட்டல் முறையில் மாத்திரமே செலுத்த முடியும்!
Local
19 August 2026
கண்டியில் மதுபானக் கடைகள் 10 நாட்களுக்கு மூடல்
Local
19 August 2026
அடுத்த படத்திற்கு தயாராகும் சிறுத்தை சிவா: அஜித், தனுஷ் இணைய விருப்பம்
Local
19 August 2026
அதிக வெப்பம் குறித்த எச்சரிக்கை – சுகாதார அமைச்சு வெளியிட்ட முக்கிய வழிகாட்டல்
Local
19 August 2026
மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் அரச ஊழியர்களுக்கு விசேட சலுகை - தமிழ்நாடு அரசு தீர்மானம்
Local
19 August 2026
காலி டெஸ்டில் மனோதத்துவ ஆட்டம்: ஜெய்ஸ்வாலின் தூண்டிலில் சிக்கி அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்த திக்வெல்ல!
Local
19 August 2026
அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி அணிதல் கட்டாயம் - செப்டம்பர் 19ஆம் திகதியுடன் சலுகைக்காலம் நிறைவு
Local
19 August 2026