புதிய 'பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாத்தல்' சட்டமூல வரைவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
தற்போதைய, 1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தில் காணப்படுகின்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் புதிய சட்டமொன்றை அறிமுகத்துவதன் தேவை கருதி, இது தொடர்பான ஆரம்ப வரைவொன்றைத் தயாரிப்பதற்காகத் தொழில்நுட்ப நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.
குறித்த தொழில்நுட்ப நிபுணர் குழுவினால் தயாரிக்கப்பட்ட ஆரம்ப வரைவின் அடிப்படையில் 'பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம்' என்ற பெயரில் புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்காக முன்னதாக நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை ரீதியிலான அனுமதி வழங்கப்பட்டது.
இதற்கமைய, சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்ட சட்டமூல வரைவுக்குச் சட்டமா அதிபரின் ஆலோசனையும் ஒப்புதலும் கிடைத்துள்ளது.
எனவே, குறித்த சட்டமூல வரைவை அரசாங்கத்தின் வர்த்தமானியில் வெளியிட்டு, அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் அங்கீகாரத்துக்காகச் சமர்ப்பிப்பதற்காக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

Latest News
செம்மணியின் சோகம் : நிறைவுறாத எண்களுடன் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் நிறைவு
Local
19 August 2026
செங்குத்தாகத் தரையிறங்கும் ரொக்கெட் - விண்வெளித் துறையில் சாதனை படைத்த சீனத் தனியார் நிறுவனம்!
Local
19 August 2026
கிராண்ட் செஸ் டூர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார் பிரக்ஞானந்தா!
Local
19 August 2026
அத்தியாவசிய பொருட்களின் விலை 25 சதவீதம் வரை உயர்வடையும் அபாயம்!
Local
19 August 2026
பாகிஸ்தான் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி: பாபர் அசாம் இன்றி களமிறங்கிய பாகிஸ்தான்!
Local
19 August 2026
கிளிநொச்சியில் புலிகள் பயிற்சி முகாம் அமைக்கப்பட்டுள்ளதாக போலியான தகவல்களைப் பரப்பியவருக்கு விளக்கமறியல்
Local
19 August 2026
சிறைச்சாலைகளில் பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிய ஒருங்கிணைந்த பொறிமுறை – நீதியமைச்சர்
Local
19 August 2026
தெஹிவலை மிருகக்காட்சிசாலையின் 30 வயதான பெண் ஒட்டகச்சிவிங்கி உயிரிழப்பு
Local
19 August 2026
போக்குவரத்து அபராதங்களை செப்டம்பர் முதல் டிஜிட்டல் முறையில் மாத்திரமே செலுத்த முடியும்!
Local
19 August 2026
கண்டியில் மதுபானக் கடைகள் 10 நாட்களுக்கு மூடல்
Local
19 August 2026