General19 August 2026

கண்டியில் மதுபானக் கடைகள் 10 நாட்களுக்கு மூடல்

வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெறும் எசல மஹா பெரஹெராவை முன்னிட்டு, நேற்று (18) முதல் கண்டியிலுள்ள பல மதுபானக் கடைகளை மூட கலால் வரித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் 28 ஆம் திகதி வரை பத்து நாட்களுக்கு மதுபானக் கடைகள் மூடப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி கடவத் சத்தர மற்றும் கங்கவட்ட கோரள பிரதேச செயலகப் பிரிவுகளில் அமைந்துள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், குண்டசாலை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பகுதியிலிருந்து எரிபொருள் நிரப்பு நிலையம் வரை அமைந்துள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படும் என கலால் வரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes