General20 August 2026

'கொஸ்கொட சுஜீ'யின் உறவினர்களுக்குச் சொந்தமான ரூ. 60 மில்லியன் பெறுமதியான காணிகள் முடக்கம்!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் "கொஸ்கொட சுஜீ" என்பவரின் உறவினர்களுக்குச் சொந்தமான, சுமார் 12 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட 5 காணிகள் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் முடக்கப்பட்டுள்ளன.

சுமார் 60 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியுடைய இந்த காணிகள், குற்றவியல் வழிகளினூடாக ஈட்டப்பட்ட சொத்துக்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைப் பிரிவினரால் முடக்கம் செய்யப்பட்டுள்ளன.

Related recommendation
Hiru TV News | Programmes