நடிகர் விக்ரம் லார்க் கிப்பான் குரங்குடன் சமூக வலைதளத்தில் காணொளி ஒன்றை வெளியிட்ட விடயம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்த நிலையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள பண்ணை ஒன்றில் வனத்துறையினர் அதிரடியாகச் சோதனைகளை மேற்கொண்டனர்.
இதன்போது, பெருந்துறையைச் சேர்ந்த கேசவநாதன் என்பவருக்குச் சொந்தமான பண்ணையில் உரிய ஆவணங்களின்றிப் பராமரிக்கப்பட்டு வந்த 11 அரியவகை வெளிநாட்டு வன விலங்குகளை வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த பண்ணையில் வளர்க்கப்பட்ட குரங்குடனேயே நடிகர் விக்ரம் காணொளியை வெளியிட்டிருந்தார்.
பறிமுதல் செய்யப்பட்ட விலங்குகளில், 7ஆப்பிரிக்கன் சர்வல் பூனைகள், 2 லார்க் கிப்பான் குரங்குகள் மற்றும் 2 கெப்புசின் குரங்குகள் அடங்குகின்றன.
இந்தநிலையில், பறிமுதல் செய்யப்பட்டுள்ள விலங்குகள் அனைத்தும் தற்போது அந்தப் பண்ணையிலேயே வனத்துறையின் பாதுகாப்பில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, அவை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா அல்லது அங்கீகரிக்கப்பட்ட மீட்பு மையத்திற்கு மாற்றப்படும் என்று மாவட்ட வன அலுவலர் தெரிவித்துள்ளார்.
Latest News
நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கு: 538 உடல்கள் மீட்பு; 900க்கும் அதிகமானோர் மாயம்!
Local
28 August 2026
அந்தப் பாடலில் ரம்யா கிருஷ்ணனுக்கு பதில் நான்தான்!" - பூர்ணா உற்சாக நேர்காணல்!
Local
28 August 2026
22ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக உயர் நீதிமன்றில் மேலும் இரண்டு மனுக்கள் தாக்கல்!
Local
28 August 2026
உயிரைக் காக்கும் அதிநவீன தொழில்நுட்பம்: கரப்பான் பூச்சிகளின் உடலில் மருத்துவ உபகரணங்கள் – விஞ்ஞானிகளின் வியக்க வைக்கும் முயற்சி!
Local
28 August 2026
நோர்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் காலமானார்
Local
28 August 2026
கொழும்பில் அதிகரிக்கும் எலித் தொல்லை – மக்கள் அச்சம்
Local
28 August 2026
கையடக்கத் தொலைபேசி வெடித்த விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
Local
28 August 2026
நேபாளத்திற்கு 3.6 மில்லியன் அமெரிக்க டொலர் அவசரகால நிவாரணம் அறிவிப்பு - அவுஸ்திரேலியா தீர்மானம்
Local
28 August 2026
நேபாள பேரிடர்: தொடர்ந்து கைகொடுக்கும் இந்தியா – இரண்டாம் கட்ட நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு!
Local
28 August 2026
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு எதிர்வரும் மாதம் இலங்கைக்கு விஜயம்
Local
28 August 2026