வடக்கு, கிழக்கில் காணிகளை விரைவில் விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி அறிவுறுத்தல்
யுத்த காலத்தில் பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தப்பட்டு, தற்போது விடுவிக்கக்கூடியவை என அடையாளம் காணப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள காணிகளை உடனடியாக விடுவித்து, சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கையளிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பாதுகாப்புப் பிரிவினருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்த காலத்தில் இராணுவ முகாம்களை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட தனியார் காணிகள் மற்றும் பொதுமக்களால் பயன்படுத்தப்பட்ட அரச காணிகளை மீண்டும் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கையளிப்பதை துரிதப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.
இதன்போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
தேசிய பாதுகாப்பு மிகவும் முக்கியமானது எனத் தெரிவித்த ஜனாதிபதி, தேசிய பாதுகாப்பின் தேவைக்காக இராணுவ முகாம்கள் எங்கு அமைக்கப்பட வேண்டும் என்பதை தீர்மானிப்பது முப்படையினர், பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புத் துறையினரின் பொறுப்பு எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில், எந்தக் காணிகளை விடுவிக்க முடியும், எந்தக் காணிகளை விடுவிக்க முடியாது என்பது தொடர்பில் இறுதித் தீர்மானத்தை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி பாதுகாப்புத் தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், பாதுகாப்புத் தேவைகளுக்காக அவசியமான காணிகளின் அளவை தீர்மானிக்கும்போது, இயன்றவரை மக்களின் கோணத்தில் சிந்தித்து, விடுவிக்கக்கூடிய அதிகபட்ச காணிகளை மக்களிடம் மீளக் கையளிக்குமாறும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
அவ்வாறு காணிகள் மீள வழங்கப்படுவதுடன், அந்த மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கமைய, அதிக உற்பத்தித் திறனைப் பெற்றுக்கொள்ளக்கூடிய நவீன விவசாயத் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்தக் கலந்துரையாடலில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், பாதுகாப்புப் பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மக்கள் பிரதிநிதிகள், ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி.பி. விக்ரமசிங்ஹ, காணி ஆணையாளர் நாயகம், முப்படைத் தளபதிகள் மற்றும் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மக்களின் காணி உரிமைகளை மீள நிலைநாட்டுவதுடன், தேசிய பாதுகாப்புத் தேவைகளையும் கருத்திற்கொண்டு காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

Latest News
தனது இரண்டு பிள்ளைகளைத் தாக்கிய தந்தை விளக்கமறியலில்!
Local
21 August 2026
காவல்துறை நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் நாமல் ராஜபக்ச முன்னிலை
Local
21 August 2026
நந்தா மாலினி மறைவையொட்டி நாடாளுமன்றத்தில் இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி
Local
21 August 2026
நந்தா மாலினி மறைவையொட்டி அரச நிறுவனங்களில் 3 நாட்களுக்கு தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்
Local
21 August 2026
சர்வதேச சந்தையில் அதிகரிப்பை பதிவு செய்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலை
Local
21 August 2026
காவல்துறை தடையகற்றல் கணினி கட்டமைப்பில் திடீர் கோளாறு - மறுஅறிவித்தல் வரை விண்ணப்பிக்க வேண்டாம்
Local
21 August 2026
வடக்கு, கிழக்கில் காணிகளை விரைவில் விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி அறிவுறுத்தல்
Local
21 August 2026
இந்தியாவில் 13 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகத்தை பயன்படுத்த தடை வருமா? நீதிமன்றில் அதிரடி உத்தரவு!
Local
21 August 2026
நடிகர் விக்ரமால் பண்ணைக்கு வந்த சோதனை: பாய்ந்த அதிகாரிகள்!
Local
21 August 2026
விஜய் ஆட்சியின் சிங்கப்பெண்களுக்கு இதோ முக்கிய அறிவிப்பு!
Local
21 August 2026