சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு இலங்கையின் உள்நாட்டுப் பொருளாதாரத்திலும் பொதுமக்களின் வாழ்க்கைச் செலவிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில்,
2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சமையல் எரிவாயு உள்ளிட்ட எரிபொருட்களை இறக்குமதி செய்வதற்கு 3,168 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் (2025) இதே காலகட்டத்தில் 1,995 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது.
இதன்படி, கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதல் பாதியில் எரிபொருள் இறக்குமதிக்கான செலவு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நிதி மற்றும் விலை ஸ்திரத்தன்மையைப் பேணும் நோக்கில், இந்த ஆண்டு மே மாதத்தில் மத்திய வங்கியின் ஓரிரவு கொள்கை வட்டி வீதம் 100 அடிப்படைப் புள்ளிகளால் உயர்த்தப்பட்டு 8.75 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்குத் தேவையான மசகு எண்ணெய் மற்றும் விசேட எரிபொருள் வகைகளை இறக்குமதி செய்யத் தனித்தனி கேள்விப்பத்திர நடைமுறைகள் பின்பற்றப்படுவதுடன், விலை மதிப்பீடுகளில் வெளிப்படைத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் ஏற்றுமதித் துறையில் உணவு, உரம் மற்றும் இரசாயனப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் சர்வதேச சந்தையில் கடுமையான விலைப் போட்டியையும் அதிகரித்துள்ள போக்குவரத்துச் செலவுகளையும் எதிர்கொண்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Latest News
நாட்டின் சுற்றுலா வருமானம் வீழ்ச்சி - வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் கணிசமாக அதிகரிப்பு
Local
23 August 2026
22ஆவது திருத்தச் சட்டத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் - இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வலியுறுத்தல்!
Local
23 August 2026
இந்தியாவிலுள்ள இலங்கை ஏதிலிகள் தடையின்றி தாயகம் திரும்ப அனுமதி - ஐக்கிய நாடுகள் சபை வரவேற்பு!
Local
23 August 2026
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்!
Local
23 August 2026
"இவர்தான் மருத்துவர்!" - மணக்கோலத்தில் கேரள மணமகளின் மனிதம்!
Local
23 August 2026
ஜனாதிபதி செயலாளருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து வெளிப்படையான விசாரணை தேவை - நாமல் வலியுறுத்தல்
Local
23 August 2026
நாடெங்கும் அதிகரிக்கும் வெப்பநிலை - முதலிடத்தில் பொலன்னறுவை!
Local
23 August 2026
தென்னாப்பிரிக்காவில் சோகம்: குத்துச்சண்டை ஜாம்பவான் சொலானி டெடே துப்பாக்கி தாக்குதலில் உயிரிழப்பு!
Local
23 August 2026
மனிதர்களை மிஞ்சிய தொழில்நுட்பம்: உசைன் போல்டின் 100மீ ஓட்ட சாதனையை நொறுக்கிய சீன ரோபோ!
Local
23 August 2026
அமெரிக்காவிற்கு கனடா அதிரடி பதிலடி: செப்டம்பர் 8 முதல் டொலருக்கு டொலர் வரி அமுல்!
Local
23 August 2026