ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் பாடசாலை ஒன்றில், வீட்டுப்பாடம் செய்யவில்லை என்பதற்காக ஆசிரியர் தாக்கியதில் ஆறு வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வியாழக்கிழமை காலை மிகுந்த உற்சாகத்துடன் பாடசாலைக்குச் சென்ற சிறுவன், மதிய வேளையில் திடீரென மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது.
உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் சிறுவனின் தந்தை கூறுகையில், "பாடசாலை வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளைப் பார்த்தபோது, ஆசிரியர் தடியால் மிரட்டித் தாக்கியது பதிவாகியுள்ளது. அந்த அதிர்ச்சியிலும் பயத்திலும் அவன் சரிந்து விழுந்துள்ளான்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த ஆசிரியர் இதுபோன்று ஏனைய மாணவர்களையும் அடித்துத் துன்புறுத்துவதாகக் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
சம்பவம் குறித்து விசாரித்த காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.
உயிரிழந்த சிறுவனின் உடலம் உடற்கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தை மிகத் தீவிரமாகக் கவனித்து வருவதாகத் தெரிவித்துள்ள ஆந்திரப் பிரதேச கல்வித்துறை, இது போன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க, ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் பயிற்சிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறது.
சம்பவம் குறித்து முழுமையாக விசாரிக்க, பிராந்திய இணை இயக்குநர் (RJD), மாவட்டக் கல்வி அதிகாரி (DEO) மற்றும் வருவாய் கோட்ட அதிகாரி (RDO) ஆகியோரைக் கொண்ட மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
Latest News
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்!
Local
23 August 2026
"இவர்தான் மருத்துவர்!" - மணக்கோலத்தில் கேரள மணமகளின் மனிதம்!
Local
23 August 2026
ஜனாதிபதி செயலாளருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து வெளிப்படையான விசாரணை தேவை - நாமல் வலியுறுத்தல்
Local
23 August 2026
நாடெங்கும் அதிகரிக்கும் வெப்பநிலை - முதலிடத்தில் பொலன்னறுவை!
Local
23 August 2026
தென்னாப்பிரிக்காவில் சோகம்: குத்துச்சண்டை ஜாம்பவான் சொலானி டெடே துப்பாக்கி தாக்குதலில் உயிரிழப்பு!
Local
23 August 2026
மனிதர்களை மிஞ்சிய தொழில்நுட்பம்: உசைன் போல்டின் 100மீ ஓட்ட சாதனையை நொறுக்கிய சீன ரோபோ!
Local
23 August 2026
அமெரிக்காவிற்கு கனடா அதிரடி பதிலடி: செப்டம்பர் 8 முதல் டொலருக்கு டொலர் வரி அமுல்!
Local
23 August 2026
உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய இடமின்றி தவிக்கும் மக்கள் காஸாவில் தொடரும் மயான நெருக்கடி!
Local
23 August 2026
ஊதா நிற மின்னல்: விண்வெளியில் இருந்து நாசா வீரர் எடுத்த அபூர்வ புகைப்படம்!
Local
23 August 2026
பேருந்தை விற்றுப் பணம் கொடுத்த உரிமையாளர்: போலி விமானி சிக்கியது எப்படி?
Local
23 August 2026