ஐக்கிய நாடுகள் சபைக்கு 725 மில்லியன் டொலர்களை செலுத்தவுள்ளதாக ட்ரம்ப் நிர்வாகம், காங்கிரஸ் என்ற நாடாளுமன்றுக்கு அறிவித்துள்ளது.
இது, அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் சபைக்கு செலுத்த வேண்டிய பில்லியன் கணக்கான நிலுவைத் தொகையில் ஒரு பகுதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா செலுத்தவுள்ள 725 மில்லியன் டொலர் என்பது, அமெரிக்கா, ஐக்கிய நாடுகளுக்கு செலுத்த வேண்டிய 4 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான தொகையில் 20 வீதத்துக்கும் குறைவானதாகும்.
முன்னதாக, ஐக்கிய நாடுகள் சபை, அதன் முழுத் திறனுக்கு ஏற்ப செயற்படவில்லை என்று ட்ரம்ப் நிர்வாகம் விமர்சித்துள்ளதுடன், பல ஐக்கிய நாடுகளின் நிறுவனங்களுக்கான நிதிகளையும் குறைத்துக்கொண்டது .
இந்தநிலையில்,ஐக்கிய நாடுகளுக்கான எந்தவொரு செலுத்துதலும் அந்த அமைப்பின் தொடர்ச்சியான சீர்திருத்தங்களைப் பொறுத்தே அமையும் என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, 80 ஆண்டுகள் பழமையான இந்த அமைப்பு, தனது நிதி நெருக்கடிக்கு மத்தியில் "ருN80" என்று அழைக்கப்படும் ஒரு சீர்திருத்தம் மற்றும் செலவுக் குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
அது ஏற்கனவே தனது 2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டத்தை 9.2 வீதம் குறைத்துள்ளதுடன், ஜெனீவா மற்றும் நியூயார்க் போன்ற அதிக செலவுள்ள நகரங்களிலிருந்து 2,000-க்கும் மேற்பட்ட வேலைகளை குறைந்த செலவுள்ள மையங்களுக்கு மாற்றியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை,இந்த ஆண்டுக்கான பாதீட்டு திட்டத்திற்காக, அதன் 193 உறுப்பு நாடுகளிடமிருந்து சுமார் 90 வீத நிலுவைத் தொகையை வசூலிக்க நம்பியிருந்தது என அதன் கட்டுப்பாட்டாளர் சந்திரமௌலி ராமநாதன் கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.
ஐக்கிய நாடுகளின் பாதீட்டுக்கு அமெரிக்காதான் மிகப்பெரிய பங்களிப்பாளராக உள்ளது,
ஆனால் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ், அது வழக்கமான மற்றும் அமைதி காக்கும் பணிகளுக்கான வரவுசெலவுத் திட்டங்களுக்குக் கட்டாயப் பணம் செலுத்த மறுத்துவிட்டதுடன், ஐக்கிய நாடுகளின் முகமைகளுக்கான தன்னார்வ நிதியுதவியையும் குறைத்துள்ளது.
கடந்த மே மாதத்தில், வோஷிங்டன் தங்களுக்குச் செலுத்த வேண்டிய 4 பில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையில், வழக்கமான பாதீட்டு திட்டத்துக்காக 2.04 பில்லியன் டொலர்,தற்போதைய மற்றும் கடந்தகால அமைதி காக்கும் பணிகளுக்காக 2.2 பில்லியன் டொலர் மற்றும் ஐக்கிய நாடுகளின் தீர்ப்பாயங்களுக்காக 44 மில்லியன் டொலர் ஆகியவை அடங்கும் என்று ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது.
Latest News
பருவநிலை மாற்றங்களை எதிர்கொள்ள புதிய பேரிடர் முகாமைத்துவ கட்டமைப்பு அவசியம்: சஜித் எச்சரிக்கை!
Local
26 August 2026
சர்வதேச நாய்கள் தினம் இன்று
Local
26 August 2026
இந்திய அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டி: follow on பெற்றது இலங்கை அணி
Local
26 August 2026
பாகிஸ்தான் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து : 15 பச்சிளங்குழந்தைகள் உயிரிழப்பு
Local
26 August 2026
"கலாசாரம் ஆடையில் இல்லை, உணர்வில் உள்ளது.." - கங்கனாவின் விமர்சனத்துக்கு கிருத்தி சனோன் பதில்
Local
26 August 2026
தரம் குறைந்த உரம் இறக்குமதி ஊழல் வழக்கு: டிசம்பர் 4ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு
Local
26 August 2026
கெஹல்பத்தர பத்மேவின் கைப்பேசிகள் மூலம் வெளிவந்த முக்கியத் தகவல்கள்: குற்றத்தடுப்புப் பிரிவு நீதிமன்றத்தில் அறிக்கை
Local
26 August 2026
காதலின் வெளிப்பாடா அல்லது சட்ட மீறலா? சிற்றூந்தில் 3,400 முத்தக் குறியீடுகளைப் பதித்த இளம் பெண்ணுக்குக் காத்திருந்த அதிர்ச்சி!
Local
26 August 2026
டொக்சிக் படக்குழுவின் அதிரடி வேண்டுகோள்: இரசிகர்கள் செய்யக்கூடாதவை என்ன?
Local
26 August 2026
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெளியேறும் மற்றும் நுழைவுப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்
Local
26 August 2026