இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கைது செய்வதற்கான சர்வதேச காவல்துறை அமைப்பான இன்டர்போலின் ‘சிவப்பு பிடியாணை’ வெளியிடக் கோரிக்கை விடுக்கவுள்ளதாக துருக்கி தெரிவித்துள்ளது.
காசாவுக்கு மனிதாபிமான உதவிகளை எடுத்துச் செல்ல முயன்ற செயற்பாட்டாளர்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் தொடர்பான உள்நாட்டு குற்றவியல் வழக்கின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக துருக்கி தெரிவித்துள்ளது.
துருக்கி நீதியமைச்சர் அகின் குர்லெக், நெதன்யாகு உள்ளிட்ட இருவருக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை சர்வதேச அளவில் தேடப்படும் நபர்களாக அறிவிக்கும் வகையில் இன்டர்போல் சிவப்பு பிடியாணை விடுக்கக் கோரி உள்துறை அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
குறித்த வழக்கில் மொத்தம் 35 பேருக்கு எதிராக உயிரிழப்புகளை ஏற்படுத்துதல், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் சித்திரவதை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மே மாதம், காசாவுக்கு மனிதாபிமான உதவிகளை எடுத்துச் செல்ல முயன்ற Global Sumud Flotilla எனப்படும் கப்பல் தொடரணி மீது சர்வதேச கடற்பரப்பில் இஸ்ரேலியப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக துருக்கி குற்றஞ்சாட்டியுள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்த சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், துருக்கியின் இந்த நடவடிக்கையை இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் கடுமையாக விமர்சித்துள்ளது.
துருக்கி ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனின் இந்த முயற்சி பயனற்றது என நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Latest News
நீதிமன்றத்தை அவமதிப்பு: 6 பேருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் தகவல் சமர்ப்பிப்பு
Local
24 August 2026
வெப்ப அலைகளின் தாக்கம் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்
Local
24 August 2026
அரசாங்கத்திற்கு எச்சரிக்கை: தடுப்புக் காவலில் உள்ள சுரேஷ் சல்லேவுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் ஜனாதிபதி தலைமையிலான அரசே முழுப் பொறுப்பு!
Local
24 August 2026
தனியார் துறை ஊழியர்களுக்கான இணையவழி தொடருந்து பருவச்சீட்டு முறைமை அறிமுகம்
Local
24 August 2026
அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை: யாழ்ப்பாணத்தில் மூன்று வர்த்த நிலையங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம்
Local
24 August 2026
கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளுக்கு புதிய மின்சார தொடருந்து திட்டம்: பணிகள் அடுத்த ஆண்டு தொடக்கம்
Local
24 August 2026
போலி மருத்துவர்கள் இருவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையுடன் அபராதம்
Local
24 August 2026
தேசிய மக்கள் சக்தி நகர சபை உறுப்பினரின் மகன் உட்பட இருவர் போதைப்பொருளுடன் கைது!
Local
23 August 2026
அளுத்கமவில் தொடருந்துடன் முச்சக்கர வண்டி மோதி விபத்து: ஒருவர் பலி; மற்றொருவர் காயம்!
Local
23 August 2026
‘Diamond Excellence விருதுகள் 2026 - ஹிரு ஊடகப் வலையமைப்புக்கு பல விருதுகள்!
Local
23 August 2026