கல்முனை வடக்கு ஆதார மருத்துவமனையில் அண்மையில் இடம்பெற்ற சுகாதார ஊழியர்களின் சீருடை தொடர்பான பிரச்சினை, சமூகங்களுக்கிடையில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் மாற்றப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கவலை வெளியிட்டுள்ளார்.
சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
குறித்த நிலைமையை சீர்செய்யும் வகையில், சுகாதார அமைச்சரினால் தற்காலிக தீர்வாக ஒரு நடவடிக்கை அறிவிக்கப்பட்ட போதிலும், அதற்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
அரச நிறுவனங்களில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஆடைக் கட்டுப்பாடு தொடர்பான சுற்றறிக்கைகளை சுகாதார அமைச்சின் சுற்றறிக்கைகள் மூலம் மட்டுமே கட்டுப்படுத்த முடியும்.
ஒரு நாட்டின் சட்டம் அல்லது சுற்றறிக்கை அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் என்றும், அதனை நிறுவனத் தலைவர்கள் தன்னிச்சையாக மாற்றியமைக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்காலிக தீர்வாக பாதிக்கப்பட்ட பெண் ஊழியர்கள் அருகிலுள்ள வேறு மருத்துவமனைக்கு இணைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் சுகாதார அமைச்சு, நாடாளுமன்ற பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடி, சீருடை ஒழுங்குமுறைகளில் திருத்தங்களை மேற்கொண்டு நிரந்தர தீர்வைக் கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
Latest News
விழாக்களில் கண்களைப் பாதுகாப்பது தொடர்பில் பொதுமக்களுக்கு விசேட அறிவுறுத்தல்!
Local
22 August 2026
எங்கும், எங்கெங்கும் தி.மு.க.வின் சாதனைகள்தான் – ஸ்டாலின் நெகிழ்ச்சி
Local
22 August 2026
80,000 வேலைவாய்ப்புகள் எங்கே? போர்ட் சிட்டி திட்டம் குறித்து சாணக்கியன் கேள்வி
Local
22 August 2026
நெடுந்தீவு மட்டக் குதிரைகளுக்கு குடிநீர் வழங்கும் இலங்கை கடற்படை!
Local
22 August 2026
விதிமுறை மீறல்: லியோனல் மெஸ்ஸிக்கு அபராதம் விதித்த MLS!
Local
22 August 2026
விக்கெட்டை வீழ்த்திய பின் வீராங்கனை செய்த கொண்டாட்டம் சமூக வலைத்தளங்களில் வைரல்!
Local
22 August 2026
லொத்தர் விற்பனையாளர்களின் பிள்ளைகளுக்கு ஜனாதிபதி நிதியத்தின் கல்விப் புலமைப்பரிசில் திட்டம்!
Local
22 August 2026
Comeback கொடுப்பதில் நாம் Specialist : ஸ்டாலின் தெரிவிப்பு
Local
22 August 2026
54 வயதில் இரண்டாவது திருமணம் – 39 வயது காதலியை கரம் பிடித்த பிரபல பொலிவுட் நடிகர்
Local
22 August 2026
இலங்கை கடற்பரப்பில் மீன்வளம் சரிவு: நாரா அமைப்பு எச்சரிக்கை!
Local
22 August 2026