போர்ட் சிட்டி எனப்படும் துறைமுக திட்டம் பல வருடங்கள் கடந்துள்ள போதிலும் உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்புகளோ அல்லது அபிவிருத்தியோ ஏற்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
நாட்டிலுள்ள சாதாரண குடிமகன் ஒருவர் விவசாயம் அல்லது தொழில்முயற்சிக்காக அரசாங்கத்திடம் காணியைக் குத்தகைக்கு பெற்று, 10-15 வருடங்களாக உறுதியளிக்கப்பட்ட திட்டங்களை முன்னெடுக்காவிட்டால் அந்த ஒப்பந்தம் இரத்து செய்யப்படும்.
ஆனால், போர்ட் சிட்டி திட்டத்தில் பல வருடங்கள் கடந்துள்ள போதிலும் உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்புகளோ அல்லது அபிவிருத்தியோ ஏற்படவில்லை என தெரிவித்தார்.
ஆனால், போர்ட் சிட்டி திட்டத்தில் பல வருடங்கள் கடந்துள்ள போதிலும் உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்புகளோ அல்லது அபிவிருத்தியோ ஏற்படவில்லை என தெரிவித்தார்.
போர்ட் சிட்டி திட்டம் மூலமாக 80,000 பேருக்கு மேல் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் எனவும், 15 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடுகள் ஈர்க்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், போதிய வேலைவாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் நாட்டின் இளைஞர்கள் மற்றும் தொழில்வல்லுநர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் நிலை தொடர்கிறது.
போர்ட் சிட்டி ஆணைக்குழுவில் உள்ள சில அதிகாரிகளுக்கு மாதத்திற்கு 10 லட்சம் முதல் 14 லட்சம் ரூபாய் வரை அதிகளவிலான வேதனம் வழங்கப்படுகிறது.
அதிகாரிகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச வேதன அளவிற்குக்கூட போர்ட் சிட்டி திட்டத்தின் மூலம் அரசாங்கத்திற்குப் போதிய வருமானம் கிடைக்கப்பெறவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குற்றச்சாட்டியுள்ளார்.
Latest News
கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளுக்கு புதிய மின்சார தொடருந்து திட்டம்: பணிகள் அடுத்த ஆண்டு தொடக்கம்
Local
24 August 2026
போலி மருத்துவர்கள் இருவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையுடன் அபராதம்
Local
24 August 2026
தேசிய மக்கள் சக்தி நகர சபை உறுப்பினரின் மகன் உட்பட இருவர் போதைப்பொருளுடன் கைது!
Local
23 August 2026
அளுத்கமவில் தொடருந்துடன் முச்சக்கர வண்டி மோதி விபத்து: ஒருவர் பலி; மற்றொருவர் காயம்!
Local
23 August 2026
‘Diamond Excellence விருதுகள் 2026 - ஹிரு ஊடகப் வலையமைப்புக்கு பல விருதுகள்!
Local
23 August 2026
முதல் நாளில் 300 ஓட்டங்களை குவித்தது இந்தியா - 5 விக்கெட்டுக்களை வீழ்த்தியது இலங்கை
Local
23 August 2026
முச்சக்கர வண்டி ஓட்டுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த பரிசீலனை!
Local
23 August 2026
இலங்கை சிவில் வானூர்தி போக்குவரத்து அதிகார சபைக்கு புதிய தலைவர் நியமனம்!
Local
23 August 2026
மட்டக்களப்பில் உந்துருளி விபத்து: இரு மாணவர்கள் பலி - மேலும் 5 பேர் காயம்!
Local
23 August 2026
ஹக்கலையில் பேருந்து மோதியதில் ஒருவர் பலி!
Local
23 August 2026