அரச வங்கிகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் கடன்களைப் பெற்று, அவற்றை மீளச் செலுத்தாத நபர்கள் மற்றும் நிறுவனங்களின் பட்டியலை அரசாங்கம் உடனடியாக பகிரங்கப்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.
சூரியனின் ‘விழுதுகள்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய பலர் அரச வங்கிகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் கடன்களைப் பெற்று, அவற்றை மீளச் செலுத்தாமல் நிலுவையில் வைத்திருப்பதாக சாணக்கியன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மக்களின் பணத்தைப் பயன்படுத்தி, அவர்கள் வெளியில் வட்டிக்கு பணம் வழங்கும் வியாபாரத்தில் ஈடுபடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, கடன்களை மீளச் செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்களின் முழுமையான பட்டியலை கோப் குழு உடனடியாகப் பெற்று, அதனைப் பகிரங்கப்படுத்த வேண்டும் எனவும் சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், இவ்வாறான நிதி முறைகேடுகளைத் தடுப்பதற்கு கோப் குழு தீவிரமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த காலங்களில் பேசப்பட்ட பில்லியன் கணக்கான உகண்டா பணப்பரிமாற்றங்கள், லம்போகினி சொகுசு வாகனங்கள் மற்றும் தங்கக் குதிரைகள் தொடர்பான பாரிய ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்தும் உரிய விசாரணைகள் இடம்பெறவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விசாரணைகள் வெறுமனே அரசியல் பிரசாரமாக மட்டுமே நின்றுவிட்டனவா அல்லது அவை தொடர்பான உண்மை நிலவரம் என்ன என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.
Latest News
சட்டத்தரணிகள் சங்கத் தலைவருக்கு எதிரான போராட்டத்துக்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கண்டனம்!
Local
24 August 2026
எல்நினோ காலநிலையால் மின்சார தட்டுப்பாடு ஏற்படலாம் என எச்சரிக்கை!
Local
24 August 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22 அறிவிக்கப்படவுள்ளது!
Local
24 August 2026
டிடிவி தினகரன் விமர்சனம்: "ரகுவரன் ஸ்டைலில் வில்லனாகத் தெரியும் விஜய்
Local
24 August 2026
2 ஆம் நாள் முடிவு: இலங்கை அணி தடுமாற்றம்; இந்தியா வலுவான நிலையில்!
Local
24 August 2026
2027 ஆம் ஆண்டுக்கான முக்கிய பாடசாலை பரீட்சை திகதிகள் அறிவிப்பு
Local
24 August 2026
கால்வாயிலிருந்து இரண்டு வயதுக் குழந்தை உடலமாக மீட்பு
Local
24 August 2026
யுக்ரைன் போராட்டத்தை நாசி ஜெர்மனிக்கு எதிரான போருடன் ஒப்பிட்ட பிரித்தானிய பிரதமர் அண்டி பர்ன்ஹாம்!
Local
24 August 2026
நீதிமன்றங்களின் சுயாதீனத்தில் தலையிட வேண்டாம் - அரசாங்கத்திற்கு நாமல் எச்சரிக்கை!
Local
24 August 2026
ரூ.2000 முதல் ரூ.10 கோடி வரை : லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் வேதன வளர்ச்சி!
Local
24 August 2026